India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மாவட்டத்தில் முதியோர் ஒய்வூதியத்திட்டத்தின் கீழ் (OAP) பயன்பெறும் பயனாளிகளுக்கு தீபாவளி – 2024 பண்டிகையை முன்னிட்டு முதியோர் ஒய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு நியாய விலைக்கடைகளில் விற்பனை முனைய இயந்திரம் மூலமாக வேட்டிகள் / சேலைகள் விநியோகம் செய்யப்படவுள்ளது. பயனாளிகள் நியாய விலைக்கடைகளுக்கு சென்று இலவச வேட்டிகள்/ சேலைகளை பெற்றுக் கொண்டு பயன்பெறலாம் என தேனி ஆட்சியர் அறிவித்துள்ளார்.

போடி அரசு பொறியல் கல்லூரியில் உயர்கல்வித்துறை சார்பாக ரூ.8 கோடி 66.55 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட உள்விளையாட்டு அரங்கத்தை இன்று(அக்.29) முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து அங்குள்ள உடற்பயிற்சி கூடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா நேரில் பார்வையிட்டார். மேலும் மாவட்ட ஆட்சியர் உடற்பயிற்சி மேற்கொண்டார். இதில் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

தேனி, அல்லி நகரம் பகுதிகளில் செயல்படும் சட்டவிரோத குவாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை திங்கட்கிழமை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, ” சட்டவிரோத குவாரிகளை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதுடன், மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை மற்றும் தமிழ்நாடு அரசின் வருவாய் துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.

தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளை பசுமை வளாகமாக மாற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்காக பசுமை பள்ளிகள் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தேனி மாவட்டத்தில் ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, ஜெயமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆசாரிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இப்பள்ளிகளில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாடு, வளர்ச்சி பணிகள் நடைபெற உள்ளன.

தேனி மாவட்டத்தில் உள்ள 30 தேவர் சிலைகள் உள்ள இடங்கள், ஜெயந்தி விழாக்கள் நடக்கும் இடங்களில் பிரச்னைகளை தவிர்க்க போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தேனி மாவட்டத்தில் இருந்து பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்திக்கு செல்லும் வாகனங்கள் பாஸ் பெறுவது கட்டாயம். விதி மீறிய வாகனங்கள் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என, தேனி எஸ்.பி., சிவபிரசாத் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை நாளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். அனுமதிக்கப்பட்டுள்ள பட்டாசுகளை மட்டும் வெடிக்க வேண்டும். மருத்துவமனைகள், புனித தலங்கள் பகுதிகளில் வெடிக்க கூடாது. அதிக சத்தம், வெளிச்சம், புகை ஏற்படுத்தக்கூடிய வெடிகளை தவிர்க்க வேண்டும். பண்டிகையை பாதுகாப்பான முறையில் கொண்டாட வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

கூடலூர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார்-புவனேஸ்வரி தம்பதியின் மகள் சாய்சினி(10) மனவளர்ச்சி குன்றியவர். தற்போது இவர்களது வீடு பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று புவனேஸ்வரி வீட்டின் மாடிக்கு சென்றுவிட்டு சிறிது நேரத்துக்கு பின் கீழே இறங்கி வந்துள்ளார். அப்போது விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தேனி மாவட்டத்தில் இன்று(அக்.28) திங்கட்கிழமை இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் பல நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக அக்.22ல் 57.91 அடியாக இருந்த வைகை அணை நீர்மட்டம் நேற்று(அக்.27) 59.68 அடியாக உயர்ந்து காணப்பட்டது. (மொத்த உயரம் 71 அடி). மூல வைகை ஆற்றில் இருந்து அணைக்கு வினாடிக்கு 336 கன அடி நீர் சென்றடைகிறது. அணையில் இருந்து மதுரை, தேனி, ஆண்டிபட்டி, சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம் போல் வெளியேறுகிறது.

தமிழக அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் இலவச நீட் & ஜே.இ.இ. உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் துவங்கியுள்ளன. இந்த பயிற்சி வகுப்புகள் 13 வாரங்கள் நடைபெறும். இதில் 19 வகையான நுழைவு தேர்வுகள் அடங்கும். விண்ணப்ப கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும். வட்டார வாரியாக 160 மாணவர்கள் தகுதி பெறுவர் என்றனர். ( பள்ளி மாணவர்களுக்கு பகிரவும்)
Sorry, no posts matched your criteria.