India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மே12 ஆம் தேதி தேனியில் கனமழை பெய்யக்கூடும். மேலும், மே 13 முதல் மே 15 வரை தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. மழை அறிவிப்பால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தேனி மாவட்டத்தில் இன்று (மே.09) 4 மணி வரை லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தேனி மாவட்டத்தில் இன்று (மே.09) கனமழை பதிவாக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தேனியில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. அக்கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை நடைபெறுகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு தேனியில் நாளை ஒருநாள் மட்டும உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சஜீவனா உத்தரவிட்டுள்ளார்.
வைகைபுதுரை சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவர் மீன் ஏல டோக்கன் வாங்குவதற்கு குரியம்மாள்புரம் நோக்கி டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மூன்று பேரோடு வந்த டூவீலர் செல்லப்பாண்டியின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த செல்லப்பாண்டி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மற்ற 3 பேர் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்ச்சி காரணமாக, தமிழ்நாட்டில் இன்று(மே 9) ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி, தேனி மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வளமீட்பு மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் தேனி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் வளமீட்பு மையம் அருகே நிறுத்தியிருந்த நகராட்சி ஊழியர் டூவீலர், நகராட்சி பேட்டரி வாகனம், பிளாஸ்டிக் பொருட்களை கட்டும் இயந்திரம் சேதமடைந்தன.
வைகை ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள வைகை அணை தேனி ஆண்டிப்பட்டியிலிருந்து 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. 1959ஆம் ஆண்டு திறந்து பயன்பாட்டுக்கு வந்த, 111 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 71 அடி நீா் தேக்கி வைக்கப்படுகிறது. இந்த அணையைச் சுற்றி அழகிய பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகளுக்கான ரயில்கள், மற்றும் விளையாட்டு திடல்கள் உள்ளன. இந்த அணை பிரபலமாகத சுற்றுத்தலமாக இருந்து வருகிறது.
கம்பத்தை சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது மனைவி ரம்யாவுடன் நேற்று வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலுக்கு ஆட்டோவில் சென்று விட்டு இன்று அதிகாலை கம்பத்திற்கு திரும்பியுள்ளனர். கம்பம் புதுப்பட்டி அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த அரசு பேருந்து ஆட்டோ மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே நல்லதம்பி உயிரிழந்தார். படுகாயமடைந்த ரம்யா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30 முதல் 40 கிமீ வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதன்படி தேனி உட்பட 14 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.