India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கம்பத்தை சேர்ந்தவர் சக்தி பிரகாஷ் (24). நேற்று பிறந்தநாள் கண்ட அவர் தனது தந்தையிடம் டூவீலரை வாங்கிக் கொண்டு நண்பர் ரஞ்சித்துடன் கோயிலுக்கு சென்றுவிட்டு முல்லை பெரியாற்றில் குளிக்க சென்றுள்ளார். ரஞ்சித்தை சாப்பாடு வாங்கி வர அனுப்பிவிட்டு ஆற்றில் குளிக்க சென்றவர் நீச்சல் தெரியாததால் மூச்சுத் திணறி பரிதாபமாக பலியானார். புகாரின்பேரில் கம்பம் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
வைகை பூர்வீக பாசன பகுதி 3ல் உள்ள ராமநாதபுரம் மாவட்ட கண்மாய்களுக்காக வைகை அணையில் இருந்து நேற்று (மே 10) காலை 10.15 மணிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. திறக்கப்பட்ட நீர் 11.30 மணிக்கு விநாடிக்கு 3000 கனஅடியாக உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அணையின் வலது, இடது கரைகளை இணைக்கும் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் சுற்றுலாப் பயணிகள் தரைப்பாலம் வழியாக செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் போடி ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளி மாணவி பா.கிருத்திகா தமிழ் பாடத்தில் 99 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளார். இந்த மாணவிக்கு நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கைப்பேசி மூலம் தொடா்புகொண்டு தனது பாராட்டினை தெரிவித்தாா். மாணவி கிருத்திகாவின் தந்தை பாலசுப்பிரமணியன் வாடகை சரக்கு வாகன ஓட்டுநராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று (மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
தேனி மாவட்டத்தில் இன்று (மே.10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 88.81% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 84.77 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 92.66 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி அடிப்படையில் தேனி மாவட்டம் 23ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.
வைகை அணையில் இருந்து இன்று பாசனத்திற்காக விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 5 நாட்களுக்கு 915 மில்லியன் கன அடி நீர் திறக்கப்படவுள்ளது. இதனால் தேனி மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை ஆற்றில் குளிக்கவோ, இறங்கவோ அல்லது ஆற்றை கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் 92.63 % தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 89.98 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 95.29 % தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
கம்பம் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் நேற்று (மே.9) கம்பம் ஆலமரத்துகுளம் கோழிப்பண்ணை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த ஆட்டோ இவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கண்ணன் கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். விபத்து குறித்து கம்பம் தெற்கு போலீசார் ஆட்டோ ஓட்டுநர் ஆசிக்கனி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து உயர் கல்வி பயிலுவதற்கு “கல்லூரி கனவு” வழிகாட்டுதல் நிகழ்ச்சி 15.05.2024 அன்று வடபுதுப்பட்டி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.