Theni

News May 15, 2024

தேனி : நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

தேனி மாவட்டத்தில் நாளை (மே.16) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கு மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 15, 2024

தேனிக்கு ஆரஞ்சு அலர்ட்

image

தேனி மாவட்டத்தில் இன்று (மே.15) கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வரை) கனமழை முதல் மிக கனமழை பதிவாகக்கூடும். சமீபமாகவே தமிழகத்தில் ஆங்காங்கு மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 15, 2024

அரசு மகளிர் ஐ.டி.ஐ.யில் சேர்க்கை தொடக்கம்

image

ஆண்டிபட்டி அரசு மகளிர் ஐ.டி.ஐ.யில் சேர்க்கை தொடங்கியுள்ளது. பல தொழில்நுட்ப பிரிவுகளில்
8ம் வகுப்பு முதல் மேற்படிப்பு முடித்தவர்கள் வரை சேரலாம். மாதந்தோறும் கல்வி உதவித்தொகை ரூ.750, சீருடைகள், காலணிகள், பாடப்புத்தகங்கள், வரைபட உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். பயிற்சிக் கட்டணம் இல்லை. புதுமைப்பெண் திட்டம் உண்டு. மேலும் விவரங்களுக்கு 93440 149240, 88385 22077ல் தொடர்பு கொள்ளலாம்.

News May 14, 2024

தேனி: நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 22 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.தேனி மாவட்டத்தில் நாளை (மே.15) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 14, 2024

தேனி : அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் 26ஆவது இடம்

image

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் தேனி மாவட்டம் 26 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 83.75% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 77.41 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 89.44 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

News May 14, 2024

+1 RESULT: தேனி 90.08% தேர்ச்சி!

image

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி தேனி மாவட்டத்தில் மாணவர்கள் 85.84% பேரும், மாணவியர் 94.04% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 90.08% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

News May 14, 2024

பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

image

முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் நேற்று மழை பெய்ததால் நேற்று வரை வினாடிக்கு 100 கன அடியாக இருந்த அணையின் நீர்வரத்து, இன்று காலை முதல் வினாடிக்கு 405 கனஅடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 115.10 அடியாகவும் அணியிலிருந்து தமிழக பகுதிக்கு விவாதிக்க நூறு கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. பெரியார் அணை 24.8 மி.மீ, தேக்கடி 6.மி.மீ மழை பதிவாகி உள்ளது.

News May 14, 2024

விளையாட்டு வீரா் இட ஒதுக்கீட்டில் மாணவா் சோக்கை

image

உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹெளதியா கல்லூரியில் விளையாட்டு வீரா்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் சேர விரும்பும் மாணவ மாணவிகளுக்காக மே 16-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை விளையாட்டு போட்டிகளுக்கான தோ்வு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க ஆா்வமுள்ள இளநிலை, முதுநிலை வீரா்கள், கல்லூரி உடற்கல்வி இயக்குநரை அணுகி போட்டித் தேர்வில் கலந்து கொள்ளலாம் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. 

News May 13, 2024

தேனி மாவட்டத்தில் மழை

image

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு10 மணி வரை தேனி மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 13, 2024

தேனி மாவட்டத்தில் மழை

image

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 7 மணி வரை தேனி மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!