India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எரிவாயு நுகர்வோர்களுக்கு சிலிண்டர் வழங்குவதில் காணப்படும் குறைபாடுகளை களையும் பொருட்டு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் தேனி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், எண்ணெய் நிறுவன மேலாளர்கள் மற்றும் எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 28ஆம் தேதி பிற்பகல் 4 மணிக்கு நடைபெறும் என தேனி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி, சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் பதிவுகள் மாவட்ட சமூக வலைதள கண்காணிப்பு குழு மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் சாதி, மத உணர்வுகளை தூண்டும் விதமாக கருத்துக்களை பதிவிடுபவர்களை சமூக வலைதள கண்காணிப்பு குழு மூலமாக அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி மாவட்ட காவல் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனியில் நாளை கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (ஜூன்.22) வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தேனி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் உள் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட்ஸ் திட்டத்தின் கீழ் புதிதாக தொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கடனுதவி பெற +2 தேர்ச்சி பெற்றவர்கள், பட்டம், பட்டயம், ஐடிஐ, தொழிற்கல்வி ஆகிய கல்வித் தகுதியினை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தொழில்கள் துவங்க ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை வங்கிக் கடனுதவி வழங்க பரிந்துரை செய்யப்படும். மேலும் விபரங்களுக்கு 8925534002 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்த தேனி மாவட்ட விண்ணப்பதாரர்கள் பயன்பெற மாவட்ட வேலைவாய்ப்பு மைய வளாகத்தில் TNPSC குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான முழுமாதிரி தேர்வுகள் ஜூன் 24, 27, ஜூலை, 2, 5 ஆகிய தேதிகளில் சிறந்த வல்லுனர்கள் மூலம் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு TNPSC தரத்தில் நடத்தப்படவுள்ளது. மேலும் விபரங்களுக்கு 6379268661 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
உத்தமபாளையம் வேளாண்மைத் துறை அலுவலகத்தில் நேற்று (ஜூன்.21) முதலமைச்சரின் மண்ணுயிர் காப்போம் 2024-2025 திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்வில் உத்தமபாளையம், கம்பம் ஒன்றியங்களைச் சோ்ந்த 100-க்கும் அதிகமான விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் பசுந்தாள் உரவிதை (தக்கைப்பூண்டு) விநியோகம் செய்யப்பட்டது.
தேனி மாவட்டத்தில் உள்ள 5 காவல் உள்கோட்டங்களில் மொத்தம் 31 சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்கள், 5 அனைத்து மகளிா் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 19 காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் உதவி ஆய்வாளர்களை மாவட்டத்துக்குட்பட்ட காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் உத்தரவிட்டுள்ளார்.
தேனி மாவட்டத்தில் நடப்பு சாகுபடிக்கு தேவையான உரங்களான யூரியா 2,149 மெ.டன்னும், DAP 786 மெ.டன்னும் (Green star, IPL & IFFCO) பொட்டாஷ் 485 மெ.டன் (IPL) மற்றும் கலப்பு உரங்கள் 4,088 மெ.டன்னும் (Fact, GFL, CIL, IFFCO) தனியார் நிறுவனங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகள் குறைத்தீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தலைமையில் நேற்று (21.06.2024) நடைபெற்றது. தோட்டக்கலைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்த சிறப்பு கையேட்டினை விவசாயிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.
வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக நடப்பு பருவத்தில் விவசாயிகளுக்கு நெல் விதை இதுவரை 63.35 மெ.டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் விதை 42 மெ.டன்னும் (NLR, CO 55), சிறுதானியங்கள் 5.3 மெ.டன்னும் (கம்பு கோ 10, குதிரைவாலி MDU 1) பயறு வகை விதைகள் 9.5 மெ.டன்னும், எண்ணெய்வித்துப் பயிர் விதைகள் 4.9 மெ.டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.