India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேளாண்மை பொறியியல் துறை மூலம் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத் திட்டத்தின் கீழ், தரிசு நிலங்களை உழுது சிறு தானியம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக வங்கி கணக்கு மூலம் ஹெக்டர் ஒன்றுக்கு ரூ.5,400 வழங்கப்படுகிறது. பெற விரும்பும் விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் தேனி, உத்தமபாளையத்தில் செயல்பட்டு வரும் வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது
தேனி மாவட்டம், கெங்குவார் பட்டி பகுதியில் அமைந்துள்ள பண்ணை வீட்டில், கவிப்பேரரசு வைரமுத்து பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது. இதனை ஒட்டி, தேவதானப்பட்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் ஸ்டாலின் குணா, தேவதானப்பட்டி பேரூராட்சி துணை தலைவர் நிபந்தன் ஆகியோர் கவிஞர் வைரமுத்துக்கு மகுடம் சூட்டி வீரவாள் பரிசளித்தனர். அருகில், நிர்வாகிகள் பொதுமக்கள் இருந்தனர்.
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் இன்று குரூப் 1 தேர்வு நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பழனியப்பா நினைவு மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்ற குரூப் 1 தேர்வு மையத்தில் தேர்வு எழுதுபவர்களின் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா நேரில் சென்று பார்வையிட்டார்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் சஜீவனா தலைமையில் தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலை ரயில்வே மேம்பாலம் கட்டுதல் பணி நடைபெற்று வருவதால் ஜூலை 19ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை பொதுமக்கள் மாட்டுப் பாதை செய்வதற்காக நடவடிக்கை குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்டுரை சார்ந்த அலுவலர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று(ஜூலை 13) லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாட்டின் காரணமாக தேனி மாவட்டத்தில் இன்று இரவு 7 மணிக்குள்ளாக லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் எண்ணெய் வித்துகள் பயிரிடும் விவசாயிகள் டிஏபி உரத்தை பயன்படுத்துவதால் அவை மண்ணில் உப்புத்தன்மையை ஏற்படுத்துவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக சூப்பர் பாஸ்பேட் உரத்தில் பாஸ்பரஸ், சல்பர், கால்சியம் போன்ற கூடுதல் சத்துகள் உள்ளன. இதனை எண்ணெய்வித்து பயிர்களில் பயன்படுத்தும்போது மகசூல் அதிகரிப்பதுடன் எண்ணெய் அதிகளவில் கிடைக்கும் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று(ஜூலை 12) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாட்டின் காரணமாக தேனி மாவட்டத்தில் இன்று இரவு 7 மணிக்குள்ளாக இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (மாலை 5 மணி வரை ) தேனி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் 5 ஹெக்டேரில் டிராகன்பழ தோட்டம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பழத்தோட்டம் அமைக்க ஹெக்டேருக்கு ரூ.2.40 லட்சம் செலவாகும்; இதில் 40% அதாவது ரூ.96,000 மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. விருப்பம் உள்ளோர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களை அணுகி விவரங்களை தெரிந்துகொள்ளலாம் என தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று சில பகுதிகளில் கனமழையும், சில பகுதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி) வரை தேனி மாவட்டத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறி மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.