Theni

News November 25, 2024

குறைதீர் முகாமில் பெறப்பட்ட 290 மனுக்கள்

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் இன்று(நவ.25) மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது தேனி மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதியில் இருந்து தங்கள் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக 290 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் வழங்கினர் மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தப்பட்டு தீர்வு காணப்படும் என தெரிவித்தார்

News November 25, 2024

நவ.27 அன்று குழந்தைகளுக்கு இலவச தங்கமோதிரம்

image

தேனி: நவ.27ஆம் தேதி தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என இன்று(நவ.25) தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News November 25, 2024

சீனா பழம் தேனியில் விற்பனை

image

போடியில் மருத்துவ குணம் நிறைந்த அரிய வகையான பெர்சிமன் பழங்கள் சீசன் துவங்கி உள்ள நிலையில் கிலோ ரூ.300க்கு விற்பனையாகிறது. இதன் காய் பச்சையாகவும், பழமாக மாறியவுடன் ஆரஞ்சு நிறத்தில் மாறிவிடும். புளிப்பு, இனிப்பு சதை பிடிப்புடன் இருக்கும். வைட்டமின் சி, கால்சியம், இரும்பு சத்து, நோய் எதிர்ப்பு சக்தி கொண்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து விற்பனை செய்கின்றனர்.

News November 25, 2024

தேனி விபத்தில் மளமளவென பற்றி எரிந்த லாரி ஒருவர் பலி

image

தேனி கோட்டூரைச் சேர்ந்தவர் பிரவீன். இவரை காண தம்பி மதன்குமார் ராணுவ வீரர் சென்றார். வேலை முடிந்து இருவரும் தனிதனி டூவீலர்களில் பெரியகுளத்திலிருந்து கோட்டூர் நோக்கி சென்றனர். அப்போது திண்டுக்கல்-குமுளி ரோட்டில் அடுத்தடுத்து டூவீலர்கள் மோதியதில் நின்ற மினி லாரி மீது மோதியது. இதில் பிரவீன் சம்பவ இடத்திலே பலியானர். மதன்குமார் படுகாயமடைந்தார். டூ வீலர் மினிலாரியில் சிக்கியதால் தீப்பிடித்து எரிந்தது.

News November 24, 2024

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம் 

image

தேனி மாவட்டத்தில் இன்று (24.11.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News November 24, 2024

தேனியில் தம்பதி மீது கொடூர தாக்குதல்

image

தேனி மாவட்டம் தேவாரத்தை சேர்ந்தவர் மணிக்குமார்.இவரிடம் இதே பகுதியை சேர்ந்த நாட்ராயன் பணம் கடன் வாங்கியிருந்தார்.இந்த கடனைத் திருப்பி கேட்டத்தில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.இதனால் ஆத்திரமடைந்த நாட்ராயன் இவரது மகன் லோகேஷ், நாகராஜ் மகன் லோகேஷ் ஆகிய மூவரும் சேர்ந்து மணிக்குமார், மனைவி சந்திரகலா ஆகியோரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News November 24, 2024

ஐயப்ப பக்தர்களுக்கு தேனி ஆட்சியர் வேண்டுகோள்

image

தேனி மாவட்டம், குமுளி மலைப்பாதை வழியாக பல்வேறு பகுதிகளில் இருந்து சபரிமலைக்கு பக்தர்கள் சென்று வருகின்றனர். அவ்வப்போது மலை சாலையில் வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் சபரிமலைக்கு பாதயாத்திரையாக செல்லக்கூடிய பக்தர்கள் குமுளி மலைப்பாதையில் இரவு பயணத்தை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News November 24, 2024

சபரிமலை வழித்தடத்தில் மூடுபனி வாகன ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை

image

சபரிமலைக்கான முக்கிய வழித்தடமாக தேனி மாவட்டம் குமுளி மலைச்சாலை வழியாக ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு பக்தர்கள் சென்று வருகின்றனர். தற்போது ஏற்பட்டு வரும் மூடுபனி மலைப்பகுதியில் வாகனங்களை இயக்குவதில் அனுபவம் இல்லாதவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. ஆகவே அனுபவம் உள்ள வாகன ஓட்டுநர்கள் மூலம் தங்களின் சபரிமலை பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று வனத்துறை கேட்டுக்கொண்டுள்ளது

News November 24, 2024

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

image

தேனி மாவட்டத்தில் இன்று(நவ.23) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News November 23, 2024

கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட தேனி எம்.பி

image

கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டார்.  சாக்கடை பணியை விரைந்து முடிக்கவும் ஊராட்சி நலன் சார்ந்த கட்டுமான பணிகளை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தபால் அலுவலகம் ஒதுக்க இடம் தரப்படும் என உறுதியளித்தார்.

error: Content is protected !!