India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மாவட்ட வேளாண் பொறியியல் துறை சார்பில் பவர் டில்லர், களையெடுக்க பயன்படும் பவர் வீடர் கருவிகள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. இதில் பவர் டில்லர் வாங்க அதிகபட்சம் ரூ.1.20 லட்சம், பவர் வீடர் வாங்க அதிகபட்சம் ரூ.63,000 வரை மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களை நேரில் தொடர்பு கொள்ளலாம் என வேளாண் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்த்தை சேர்ந்தவர் ஜெயசக்கரவர்த்தி. இவர் மகன் விஷ்வா 14. கடந்த 24ம் தேதி டியூஷன் சென்று வரும்போது டூவீலரில் சென்ற இருவர், ‘உனது அம்மா, அப்பா’அழைத்து வர சொன்னார்கள் எனக்கூறி டூவீலரில் வருமாறு கடத்த முயன்றனர். சுதாரித்த விஷ்வா கையில் இருந்த கூர்மையான ஆணியால் குத்தி தப்பினார். இதுகுறித்து தேனி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். கடந்த சில நாட்களில் இது 2வது முறை என்பது குறிப்பிடதக்கது.

தேனி மாவட்டத்தில் இன்று(நவ.28) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டத்தில், முதியோர் உதவித்தொகை பெற உத்தரவு வழங்கியும், பணம் கிடைக்காமல் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காத்திருப்போர் பட்டியல் போல் காத்திருக்கிறார்கள். சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1200ம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1500 வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

தேனி பகுதியைச்சேர்ந்தவர் அஜித். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் தாய் கொடுத்த புகாரைத்தொடர்ந்து அஜித்தை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர். இந்நிலையில் இன்று(நவ.28) விசாரணை முடிவடைந்து, மாவட்ட சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி கணேஷ் குற்றவாளி அஜித்துக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு சமூக நீதிக்கான “தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. விருது பெறுவோருக்கு விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகின்றன. தகுதி உடையோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். விண்ணப்பிக்க 20.12.2024 கடைசி தேதி ஆகும்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வருவாய்த்துறையினர் தங்கள் கோரிக்கைகளான 3 ஆண்டுகளாக அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்பவில்லை உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். இதனால் பொதுமக்கள் சான்றிதழ்கள் வாங்க முடியாமல் அவதியடைந்து வருகிறார்கள்.

ராயப்பன்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் தேனி மாவட்ட தொழிலாளர் நலத்துறை சார்பில் நாளை(நவ.29) சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் ஆன்லைன் பொருட்கள், உணவு டெலிவரி செய்யும் கிக் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்யலாம். விருப்பமுள்ளவர்கள் முகாமில் பங்கேற்று பயனடையுமாறு தொழிலாளர் நலத்துறை சமூக பாதுகாப்புத்திட்ட உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

தேனி வேளாண் பொறியியல் துறையில் 10லி கொள்ளளவு கொண்ட ட்ரோனை மருந்து தெளிக்க விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு டேங் மருந்தினை 0.75 ஏக்கர் பரப்பிற்கு 10 நிமிடத்திற்குள் தெளிக்க முடியும். அதாவது ஒரு மணி நேரத்தில் 8 ஏக்கருக்கு மருந்து தெளிக்க முடியும். மேலும் விபரங்களுக்கு 94431-02313 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றனர்.

முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக போதிய மழையின்றி அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வந்தது. இந்நிலையில் நேற்றைய(நவ.27) நிலவரப்படி தேக்கடியில் 8.4 மி.மீ., பெரியாறில் 10 மி.மீ., மழை பதிவானது. இதனால் அணைக்கு வினாடிக்கு 190 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 608 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு 822 கன அடி திறக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.