Theni

News December 2, 2024

சுயசான்றுடன் கட்டட அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்

image

தேனி மாவட்ட ஊராட்சி பகுதிகளில் சுய சான்று மூலம் கட்டிட அனுமதி பெற கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். கட்டட அனுமதி பெற பதிவு செய்யப்பட்ட கட்டிட வல்லுநரால் கையொப்பமிட்ட திட்ட வரைபடம் விண்ணப்பதாரரின் பெயரில் பட்டா அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவு ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்றார்.

News December 1, 2024

மாவட்ட ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியீடு

image

தேனி மாவட்டத்தில் இன்று(டிச.1) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News December 1, 2024

ஆன்லைன் வர்த்தக ஆசை காட்டி ரூ.49 லட்சம் மோசடி

image

கம்பத்தை சேர்ந்த ஐ.டி., ஊழியர் சபரி என்பவர் தன்னிடம் ஆன்லைன் வர்த்தக ஆசை காட்டி 49 லட்சம் ரூபாயை ஆன்லைன் மூலம் சிலர் மோசடி செய்ததாக தேனி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் ஆறுமுகம், மாதவன் ஆகியோரை நேற்று(நவ.30) கைது செய்து அவர்களிடமிருந்து 1.80 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த நிலையில் இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 1, 2024

வைகையிலிருந்து ஐந்து மாவட்டத்திற்கு தண்ணீர் திறப்பு

image

வைகை அணையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசனத்திற்கு திறக்கப்படும் நீர் நேற்று நிறுத்தப்பட்டது. நேற்று அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 568 கன அடியாக இருந்த நிலையில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீர் மீண்டும் இன்று மதுரை, தேனி, ஆண்டிபட்டி, சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக மீண்டும் திறந்து விடப்பட்டது.

News December 1, 2024

மாணவிக்கு கொலை மிரட்டல் காதலன் உட்பட 6 பேர் மீது வழக்கு

image

தேனியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் போடியை சேர்ந்த சந்துரு பிரகாஷ் என்பவரை காதலித்துள்ளார். காதல் விஷயம் அறிந்த சந்துரு பிரகாஷின் பெற்றோர் சுந்தரபாண்டியன், மாரியம்மாள், உறவினர் காளிச்சரண்.அவரது மனைவி சுவேதா உள்ளிட்ட 5 பேர் இணைந்து மாணவிக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து தேனி மகளிர் போலீசார் காதலன் சந்துரு பிரகாஷ், அவரது பெற்றோர் உட்பட 6 பேர் மீது நேற்று (நவ.30) வழக்கு பதிவு செய்தனர்.

News November 30, 2024

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று(நவ.30) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News November 30, 2024

பெரியகுளத்தில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 

image

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள பழைய ஆர்டிஓ ஆபீஸ் அருகில் இன்று(நவ.30) நாகர்கோவிலில் இருந்து வந்த அரசு பேருந்தும், மதுரை நோக்கி சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பயணிகள் சிறிய காயத்துடன் தப்பினர். மேலும் விபத்து குறித்து பெரியகுளம் வடகரை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

News November 30, 2024

டிச.1 முதல் டிச.15 வரை வாசக்டமி கருத்தடை சிறப்பு முகாம்

image

தேனி மாவட்டத்தில் டிச.1 முதல் 15 வரை ஆண்களுக்கான வாசக்டமி கருத்தடை ஆப்பரேஷன் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு நடந்த சிறப்பு முகாம்களில் 33 ஆண்களுக்கு கருத்தடை ஆப்பரேஷன் செய்யப்பட்டது. இந்தாண்டு 50 பேர் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கருத்தடை ஆப்பரேஷன் செய்யக்கூடிய ஆண்களுக்கு ஊக்கத் தொகையுடன் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News November 30, 2024

1.37 கோடி மோசடி வழக்கில் ஆசிரியை கைது

image

வருஷநாடு கள்ளர் பள்ளியில் தற்காலிக பணியாற்றி வரும் ஆசிரியை மகாலட்சுமி மற்றும் பாலமுருகன், நாகேந்திரக்குமார் ஆகியோர் தேனி மாவட்டத்தை சேர்ந்த 24 பேரிடம் ரூ.1.37 கோடி பெற்று கொண்டு அரசு வேலை வாங்கி தருவதாக போலி பணி நியமன ஆணைகளை வழங்கி மோசடி செய்தனர். இந்த வழக்கில் பாலமுருகன், நாகேந்திரக்குமார் ஆகியோர் ஏற்கனவே குற்ற பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் மகாலட்சுமியை நேற்று (நவ.29) கைது செய்தனர்.

News November 29, 2024

பாலியல் தொல்லை அளித்த குற்றவாளிக்கு சிறை தண்டனை

image

கம்பம் பகுதியைச்சேர்ந்த சையது அபுதாஹிர் இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காவல்துறையிடம் கொடுத்த புகாரை தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கின் அறிக்கையை தேனி மாவட்ட போஸ்கோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இன்று(நவ.29) இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து குற்றவாளி சையது அபுதாஹிர் 5.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு

error: Content is protected !!