Theni

News December 6, 2024

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம் 

image

தேனி மாவட்டத்தில் இன்று (05.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News December 5, 2024

தேனியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கருத்தரங்கம் பயிலரங்கம்

image

தேனி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று (05. 12. 2024) தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், தமிழ் ஆட்சிமொழி பயிலரங்கம் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் கலந்து ஆலோசித்தார்.

News December 5, 2024

தேனியில் உலக மண் தின விழா 

image

தேனி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் உலக மண் தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா அனைத்து வட்டார விவசாயிகளுக்கும் மண் பரிசோதனை பற்றியும், இயற்கை விவசாயத்தைப் பற்றியும் எடுத்து கூறினார். இந்நிகழ்ச்சியில் வேளாண் துறையினை சேர்ந்த அனைத்து அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

News December 5, 2024

கூட்டுறவுத்துறை பயிர்களுக்கான நிர்ணய தொகை

image

தேனி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் கூட்டுறவுத்துறை சார்பில் பயிர்களுக்கான பயிர்கடன் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகமாக திசு வாழைக்கு ரூ.1.25 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பயிருக்கும் ஏக்கருக்கு எவ்வளவு கடன் தொகை வழங்குவது பற்றி இங்குள்ள கூட்டுறவுத் துறை முடிவு செய்து மதுரை மத்திய வங்கிக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அந்தந்த பகுதி அலுவலகத்தை அணுகலாம்.

News December 5, 2024

மரியாதை செலுத்திய தேனி முன்னாள் எம்.பி

image

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு புது டெல்லியில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் எம்.பி இல்லத்தில் வைக்கப்பட்ட ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு தேனி‌ மாவட்ட முன்னாள் எம்.பி ரவீந்திரநாத் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன், கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

News December 5, 2024

கேரள வனத்துறையிடம் தமிழக அதிகாரிகள் வாக்குவாதம்

image

தேனியில் இருந்து முல்லை பெரியாறு அணையின் பாராமரிப்பு பணிகள் செய்வதற்காக தளவாடாப் பொருட்களை (எம்.சாண்ட்) ஏற்றி சென்ற 2 லாரிகள் வள்ளக்டவு பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் கேரளவனத்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் வாக்குவாதத்தில் இறங்கினர். இன்று நேற்று அல்ல, கடந்த சில மாதங்களாக இந்த நிலை இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்

News December 5, 2024

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு

image

தேனி மாவட்டத்தில் காவல்துறையினரால் மது கடத்தலில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் வரும் 18.12.2024 அன்று காலை 11 மணி அளவில் தேனியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்பட உள்ளது. தேவையுள்ளவர்கள் ஏலம் விடும் தேதிக்கு முன்பாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் இன்று தெரிவித்துள்ளார்.

News December 5, 2024

கொலை வழக்கில் 2 சிறார்கள் உட்பட 7 பேர் கைது

image

பழனிசெட்டிபட்டியை சேர்ந்த தாமோதரன் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு அணைக் கருப்பணசாமி கோயில் பகுதியில் குளிக்கும்போது ஏற்பட்ட தகராறு காரணமாக அடித்து கொலை செய்யப்பட்டார். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பிரவீன்குமார், ஹரீஸ்பிரவீன், விஜயபாரதி, அன்புச்செல்வம், புவனேஸ்வரன் மற்றும் 2 சிறார்கள் உள்ளிட்ட 7 பேரை நேற்று (டிச.04) கைது செய்தனர்.

News December 4, 2024

சின்னமனூர் பகுதியில் வரத்து குறைவால் தேங்காய் விலை உயர்வு

image

தேனி மாவட்டத்தில் நெல், வாழைக்கு அடுத்தபடியாக தென்னை விவசாயம் அதிகளவில் செய்யப்படுகிறது. மேலும் தேங்காய் சென்னை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த 4 வருடங்களாக தேங்காய் விலை குறைந்தபட்சம் ரூ.20 முதல் ரூ.30 வரை விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.45 முதல் ரூ.55 வரை விலை உயர்ந்துள்ளது. 

News December 4, 2024

விவசாய நிலங்களில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்

image

வீரபாண்டியில் இருந்து தப்புக்குண்டு செல்லக்கூடிய சாலையில் பல ஏக்கர் விவசாய நிலங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் அங்குள்ள விவசாய நிலங்கள் அருகே மர்ம நபர்கள் சிலர் மருத்துவ கழிவுகளை கொட்டி சென்றுள்ளனர். இதனால், அப்பகுதி விவசாய நிலங்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. மருத்துவக் கழிவுகளை கொட்டும் மர்ம நபர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!