Theni

News December 14, 2024

15 வயது சிறுமிக்கு திருமணம்; மூவர் கைது 

image

தேனி மாவட்டம், மயிலாடும்பாறை விரிவாக்க அலுவலராக மலர்கொடி பணியாற்றி வருகிறார். இவர் மூலக்கடை பகுதியில் குழந்தை திருமணம் குறித்து விசாரித்தபோது, 15 வயது சிறுமி மற்றும் பாரதி என்பவரும் 7 மாதத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்ததும், தற்போது அந்த பெண் 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்தது. உடனே பெண்ணின் தாய், தந்தை, கணவர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கடமலைக்குண்டு போலிசார் விசாரணை செய்தனர்.

News December 14, 2024

இளங்கோவன்-க்கு இரங்கல் தெரிவித்த ஓபிஎஸ்

image

ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று உடல்நலக் குறைவால் காலமானார். இதனை தொடர்ந்து முன்னாள் முதல்வரும் போடிநாயக்கனூர் எம்எல்ஏ வுமான ஓ.பன்னீர் செல்வம் ஈவிகேஎஸ் இளங்கோவன் இறப்பு செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும் மிகுந்த மன வேதனையும் அடைந்தேன் எனவும் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News December 14, 2024

மேகமலை சாலையில் 3 இடங்களில் மண் சரிவு

image

சின்னமனூா் அருகேயுள்ள மேகமலை மலைச் சாலையில் நேற்று (டிச.13) பெய்த கனமழை காரணமாக கடணா எஸ்டேட் உள்ளிட்ட 3 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு மரங்கள் சாலையில் விழுந்தன. தகவலறிந்த நெடுஞ்சாலைத் துறையினா் பொக்லைன் இயந்திரம் மூலமாக மண் சரிவுகளை அகற்றி சாலையை சீரமைத்தனா். பின்னா், சாலையில் கிடந்த மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனா்.

News December 13, 2024

தேனியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

image

கனமழை எச்சரிக்கை காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை(டிச.14) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி கிடையாது -ஆட்சியர் *SHARE

News December 13, 2024

மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

image

தேனி மாவட்டத்தில் இன்று(டிச.13) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News December 13, 2024

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு

image

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஆறுகள், குளங்கள் மற்றும் நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகிறது. இதனால் பொதுமக்கள், நீர் நிலைகளுக்கு சென்று நீராடவோ, இறங்கி சாகசத்தில் ஈடுபடவோ, செல்ஃபி எடுக்கவோ வேண்டாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா இன்று(டிச.13) தெரிவித்துள்ளார்.

News December 13, 2024

தேனி மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

தேனி மாவட்டம் முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வாகனங்கள் மூலம் கட்டுமான பொருட்களை வல்லக்கடவு சோதனைச் சாவடி மற்றும் தேக்கடி படகு இறங்கும் தளம் வழியாக எடுத்துச் செல்ல கேரள அரசின் வனத்துறையிடம் முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி ஷஜீவனா தெரிவித்துள்ளார்.இந்த முல்லைப் பெரியாறு அணை தேனி திண்டுக்கல் மதுரை சிவகங்கை இராமநாதபுரம் மக்களின் குடிநீர் ஆதாரமாகும்.

News December 13, 2024

ரூ.72.25 லட்சம் மோசடி வழக்கில் பெண் கைது

image

கம்பம், மேலக்கூடலுார் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் மற்றும் இவரது நண்பர்கள் நால்வரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி சந்திரசேகரன், குமார், அவரது மனைவி பூமகள், உஷாராணி, கவுரிசங்கர் ஆகிய 5 பேர் ரூ.72.25 லட்சம் பெற்று கொண்டு வேலை வாங்கித் தராமல் மோசடி செய்துள்ளனர். இது குறித்து தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் வழக்கில் தொடர்புடைய பூமகளை நேற்று (டிச.12) கைது செய்தனர்.

News December 13, 2024

தேனியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

image

கனமழை எச்சரிக்கை காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.13) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தேனி மாவட்டத்தில் கடந்த நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க

News December 12, 2024

தேனி: இரவு ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

image

தேனி மாவட்டத்தில் இன்று 12.12.2024 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!