India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் உயிர்ம வேளாண்மையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் 3 பேருக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்பட உள்ளது. விருது பெற உயிர்ம வேளாண்மையில் ஈடுபட்டதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள் https://www.tnagrisnet.tn.gov.in செப்.15க்குள் பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என வேளாண் துறையினர் தகவல் அளித்துள்ளனர்.
கோம்பை பகுதியை சேர்ந்தவர்கள் அய்யனார்-ஆர்த்தி தம்பதி. இவர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பொன்ஆண்டவர், பொன்சண்முகநாதன் ஆகியோர் ரூ.17.60 லட்சம் பெற்றனர். மேலும் இந்த தம்பதியின் உறவினர்கள் 5 பேரிடமும் இதே காரணத்தை கூறி ரூ.36.80 லட்சம் பெற்றுகொண்டு வேலை வாங்கி தராமல் மோசடியில் ஈடுபட்டனர். இது குறித்த புகாரில் தேனி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் இருவரையும் நேற்று(ஜூலை.31) கைது செய்தனர்.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கூட்ட அரங்கத்தில் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு வருமான வரி குறித்து விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் ஷஜீவனா மற்றும் மதுரை வருமான வரி துறை துணை ஆணையாளர் மதுசூதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கலெக்டர் ஷஜீவனா பேசுகையில், வருமானவரி தொடர்பாக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அரசு விதித்துள்ள விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றார்.
தேனி சார்நிலை கருவூலம் எதிரே அமைந்துள்ள உழவர் பயிற்சி மையத்தில் நாளை (ஆகஸ்ட் 1) கறவை மாடு வளர்ப்பு இலவசப் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியில் கறவைமாடு வளர்ப்போர், விவசாயிகள் பங்கேற்க விரும்புபவர்கள் 98650 16174 என்ற அலைபேசி எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என உழவர் பயிற்சி மைய தலைவர் இன்று (ஜூலை 31) தெரிவித்துள்ளார்.
ஆடிப்பட்ட விதைப்புக்கு தேவையான சின்ன துவரை, நிலக்கடலை, பாசிப்பயறு, குதிரைவாலி விதைகள் தேனி மாவட்டத்தில் போதுமான அளவில் இருப்பில் உள்ளன. மானிய விலையில் வழங்கப்படும் இந்த விதைகளை விதைப்புக்கு வாங்கி தேனி மாவட்ட விவசாயிகள் பலன் பெறலாம். விதை தேவைப்படுவோர் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தேனி மாவட்ட வேளாண் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 தமிழர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அவர்கள், முண்டக்கையில் குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், தனித்தீவாக மாறிய அப்பகுதியில் இன்று காலை மீட்புப்பணி தொடங்கியபோது, உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தேனி கோடாங்கிபட்டியில் தனியார் மசாலா கம்பெனி அருகே உள்ள குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் நேற்று (ஜூலை 30) குடோனை சோதனை செய்தபோது அங்கிருந்து 6300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கோடாங்கிபட்டியைச் சேர்ந்த பால்பாண்டி, ஈஸ்வரன் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரியில் அந்தமானை சேர்ந்த சஞ்சீவிகுமார் மகன் அபிநாயர்(19) என்பவர் முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று(ஜூலை 30) காலை 11:30 மணியளவில் கல்லுாரியில் இருந்து விடுதிக்கு சென்ற அபிநாயர் அங்கு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து பெரியகுளம் டி.எஸ்.பி. குரு வெங்கட்ராஜ் விசாரணை நடத்தி வருகின்றார்.
போடிநாயக்கனூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்று மாலை திடீரென்று போடிநாயக்கனூர் – மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போடி மூணாறு செல்லும் சாலை மூடப்பட்டது.
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தேனி மாவட்டத்தின் கீழவடகரை, அழகர்நாயக்கன்பட்டி, ஜி கல்லுப்பட்டி, எண்டப்புளி ஆகிய நான்கு ஊராட்சிகளுக்கு நாளை(ஜூலை 31) பெரியகுளம் அருகே உள்ள கல்வி குழுமம் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கி தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.