Theni

News March 1, 2026

தேனி: தொலைந்த PHONE-ஐ கண்டுபிடிப்பது இனி சுலபம்.!

image

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அத்தகைய செல்போன் தொலைந்து விட்டால் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது?. அப்படி உங்களது போன் தொலைந்து / திருடப்பட்டுவிட்டால்<> SANCHAR SAATHI <<>>என்ற செயலியில் சென்று உங்களது செல்போன் நம்பர், IMEI நம்பர் உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டு புகார் அளிக்கலாம். அதன் பின் உங்களது தொலைந்த போன் BLOCK செய்யப்பட்டு, கண்டுபிடிக்கப்படும். SHARE IT.

News March 1, 2026

தேனி: ஒரு மெசேஜ் போதும் உடனடி தீர்வு !

image

தேனி மக்களே; உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், தேனி மாவட்ட மக்கள் 8903331912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இதை மறக்காம SHARE பண்ணுங்க.

News March 1, 2026

தேனி: முன்விரோதத்தால் அரிவாள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்கு

image

மார்க்கையன்கோட்டையை சேர்ந்தவர் செந்தூரப்பாண்டி. இவருக்கும் இவரது தாய்மாமனான முருகன் என்பவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதன் காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன் விரோதம் காரணமாக முருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேர் சேர்ந்து செந்தூரப்பாண்டியை அரிவாளால் தாக்கியுள்ளனர். இதுகுறித்து முருகன் உள்ளிட்ட ஐந்து பேர் மீது சின்னமனூர் போலீசார் நேற்றூ வழக்குப்பதிவு செய்து விசாரணை.

News February 28, 2026

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 28.02.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News February 28, 2026

தேனி: இனி அடிக்கடி வங்கிக்கு அலைய தேவையில்லை!

image

தேனி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! SBI-09223766666,HDFC – 18002703333, AXIS – 18004195959, Union Bank – 09223008586, Canara Bank – 09015734734,BOB – 8468001111,Indian Bank – 9677633000, IOB – 96777 11234. இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE IT.

News February 28, 2026

தேனி: சொந்த வீடு கட்ட சூப்பர் திட்டம்

image

உங்கள் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக உள்ளது பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம். இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. சொந்த வீடு இல்லாதவர்கள்<> இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் மாவட்டத்திற்கு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அலுவலரை (04575240388) அணுகலாம். SHARE பண்ணுங்க…

News February 28, 2026

தேனி: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

தேனி மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.

1.விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். SHARE IT

News February 28, 2026

தேனி: பெண்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன்..

image

லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதற்கு மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் 18 -50 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார், பான் கார்டு, வருமான சான்று, சுய உதவிக்குழு உறுப்பினர் சான்றிதழுடன் அருகிலுள்ள சுய உதவிக்குழு அலுவலங்கள் (அ) <>-1 என்ற<<>> இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News February 28, 2026

தேனி: திமுகவில் OPS-க்கு முக்கிய பதவியா?

image

முன்னாள் முதல்வர் OPS அண்ணா அறிவாலயத்தில் நேற்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். இந்நிலையில் போடி தொகுதியில் அதிமுக வேட்பாளராக தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்ற ஓ பன்னீர்செல்வத்திற்கு திமுகவில் முக்கிய பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் OPS-க்கு சபாநாயகர் பதவி வழங்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

News February 28, 2026

போடியில் கீழே விழுந்து ஒருவர் உயிரிழப்பு

image

தேனி மாவட்டம், போடி பகுதியை சேர்ந்தவர் ரூபன் (42). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள கண்மாய் கரையில் குடிபோதையில் கீழே விழுந்துள்ளார். அதில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த ரூபன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு.

error: Content is protected !!