India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வரும் தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில் அந்த குழந்தைகளின் தாய் தனது 5 வயது மகளை தேனி பெரியகுளத்தில் உள்ள தனது தந்தை பராமரிப்பில் விட்டிருந்தார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 11 மற்றும் 12 வயதுடைய சிறுவர்கள் இருவர், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளனர். இதுகுறித்து பெரியகுளம் மகளிர் போலீசார் சிறுவர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை.
தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள்(ஆக.12, 13) ஆகிய இரு தினங்களில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் ஆக.12 மற்றும் 13 ஆகிய இரு தினங்கள் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகம், வட தமிழக மாவட்டங்கள், தென் தமிழக உள்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி நாளை(ஆக.11), ஆக.12, ஆக.13 ஆகிய நாட்களுக்கு தேனி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமெண்ட் செய்யவும். இன்று உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமெண்ட் செய்யவும். SHARE IT
ஈரோட்டில் செப்.20 முதல் செப்.22 வரை மாநில அளவிலான தடகளப் போட்டிகள் நடைபெற உள்ளன.14,16,18,20 வயதுக்குட்பட்டோர் என 4 பிரிவுகளாக நடக்கும் இப்போட்டிக்கான தேனி மாவட்ட வீரர்கள் தேர்வு ஆக.24 அன்று முத்துதேவன்பட்டியில் உள்ள வேலம்மாள் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் ஆதார், வயதுசான்று நகலுடன் நேரில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் மேல்மங்கலம், கெங்குவார்பட்டி, கீழவடகரை, வீரபாண்டி, கம்பம், கூடலூர், சின்னமனூர், குன்னூர் என 15 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டன. இங்கு 2023-2024ல் விவசாயிகளிடமிருந்து 7,000 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. மேலும், தேனி மாவட்டத்தில் இரு இடங்களில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படவுள்ளது என நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் தகவல் அளித்துள்ளார்.
தமிழக சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலா தொழில் முனைவோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது. விருது பெற விரும்புவோர் www.tntourismawards.com என்ற இணையதளத்தில் ஆக. 20க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சுற்றுலா அலுவலரை 73977 15689 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
பொது வினியோகத்திட்ட குறைபாடுகளை நீக்கி உடனுக்குடன் தீர்வு காண தேனி மாவட்டத்தில் இன்று பொது வினியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெறுகிறது. பெரியகுளத்தில் மதுராபுரி ரேஷன்கடை, தாடிச்சேரி ரேஷன்கடை, ஆண்டிபட்டி சண்முகசுந்தரபுரம் ரேஷன்கடை, உத்தமபாளையம், கம்பம், புதுப்பட்டி, போடி மற்றும் டொம்புச்சேரியில் கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைபெற உள்ளது என தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தேனி – நாகலாபுரம் சாலையில் கல்லூரி மாணவர்கள் சிலர் இருசக்கர வாகனங்களில் பந்தயம் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அப்பகுதியில் போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபட்டனர். அதில் இருசக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்த மாணவர்கள், தலைக்கவசம் அணியாத மாணவர்கள் என 30 மாணவர்கள் உட்பட 120 க்கும் மேற்பட்டவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
தேனி மாவட்டத்தில் கஞ்சா, கஞ்சா மாத்திரை, போதை ஊசி ஆகியவற்றை மாணவர்களிடம் விற்பனை செய்வோர், தொடர் திருட்டு, ரவுடிகள், கூலிப்படையாக செயல்பட்டு கொலை குற்றங்களில் ஈடுபடுபவர்கள் 300க்கு மேற்பட்டோர் உள்ளனர். இவர்களின் குற்ற சரித்திர கையேடுகள் அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் தொடர் நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என தேனி எஸ்.பி. சிவபிரசாத் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தேனி மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வரும் நாட்களில் போதை பொருட்களுக்கு எதிராக தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், போதைக்கு எதிராக பொதுமக்கள், மாணவர்கள் உறுதிமொழி எடுத்து அதனை https://enforcementbureautn.org/pledge என்ற இணைய முகவரியில், பெயருடன் பதிவு செய்தால் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என தேனி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.