India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை – போடிநாயக்கனூர் ரயில் வழித்தடத்தில் மின்சார ரயில் சேவைக்கான இறுதிகட்ட சோதனை ஓட்டம் இன்று நடந்தது. 140 கி.மீ வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு சோதிக்கப்பட்டது. இந்த ரயில் வழித்தடத்தில் இதுவரை டீசல் என்ஜின்களே இயக்கப்பட்டு வந்தன. இனி எந்த ஊரில் இருந்து மதுரை வரும் ரயிலும் அப்படியே தேனி மாவட்டம் போடிநாயக்கனூருக்கு இயக்க முடியும். புதிய ரயில்கள் போடி வழித்தடத்தில் இயக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கலைத்திருவிழா போட்டிகள் நடத்துகிறது. 2022-20-23 ஆம் ஆண்டு போட்டியில் சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி ரித்திகா, சிறார் திரைப்பட போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார். இதையடுத்து, வெற்றி பெற்ற ரித்திகா உட்பட 20 மாணவர்கள் கல்வித்துறை சார்பில் ஹாங்காங்கிற்கு 5 நாள் கல்வி சுற்றுலா செல்ல உள்ளனர்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் நகர் பகுதியில் இன்று (பி.ஆர்.பி குரூப்) ஆலியா ரெஸ்டாரன்ட் உணவகத்தினை தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, விளக்கேற்றி வைத்து, திறந்து வைத்தார். உடன் உத்தமபாளையம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பி.ஆர்.பி அழகுராஜா, சின்னமனூர் ஒன்றிய செயலாளர் விமலேஸ்வரன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தேனி மாவட்ட ஆட்சியரகத்தில், இன்று தேனி பழைய பேருந்து நிலையம் வழியாக ஒரு வழிப்பாதையாக போக்குவரத்துக்கு இடையூறு இன்றி வாகனங்கள் இயக்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட எஸ்.பி ரா.சிவபிரசாத், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.மகாராஜன், கே.எஸ்.சரவணக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகமாக வந்து கொண்டிருப்பதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் இன்று (ஆக.22) காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 64.70 அடியாக உயர்ந்து காணப்படுகிறது. இதனால் ஐந்து மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் வாக்காளர்கள் பட்டியல் சரிபார்க்கும் பணி அக்டோபர் 18ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் புதிதாக பெயர் சேர்த்தல், இறந்தவர்களின் பெயர் நீக்கம், இடம் பெயர்ந்தவர்கள் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளை செய்ய பொதுமக்கள் ஆன்லைனில் www.nvsp.in என்ற இணைய முகவரி அல்லது voter helpline செயலியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.அதேபோல் 10ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பிளஸ் 1 அல்லது தொழிற் பயிற்சிகளில் சேர்ந்துள்ளதை உறுதி செய்ய வேண்டும்.மாணவர்கள் உயர்கல்வி தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இந்தாண்டு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.
அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்க சலுகை அளித்ததால், மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு பெண்கள் அதிக அளவில் வாக்களித்தனர் என்று திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம் தேனியில் நேற்று பேசினார். மேலும், போக்குவரத்து கழகத்தை பாதுகாக்க அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், காலிப் பணியிடங்களை நிரப்பவும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
தேனி மாவட்டம் முன்னாள் படைவீரர்கள் மற்றும் படையில் பணிபுரிவோரை சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் ஆகஸ்ட் 23ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெற உள்ளதாக தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் பசுமை தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடனுதவி பெற பசுமை தொழில் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். தேனி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குனர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 26ஆம் தேதிக்குள் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது
Sorry, no posts matched your criteria.