India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெண் தொழில் முனைவோர்க்கான சிறப்பு முகாம் 07.02.2025 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வேளாண் உணவு வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. இந்த பெண் தொழில் முனைவோர் சிறப்பு முகாமில் தேவையுடையவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என தேனி மாவட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டம் தேக்கம்பட்டி மாவட்ட சிறைச்சாலையில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வினை மேற்கொண்டார். இந்த ஆய்வில் அரசு அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை காவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

தேனி மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 7 ஆம் தேதி துவங்குகிறது. இத்தேர்வு கண்காணிப்பு பணியில் 800 ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் முதல்வாரத்தில் துவங்குகின்றன. மாவட்டத்தில் 140 பள்ளிகளைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவர்கள் 13,947 பேர், பிளஸ் 2 மாணவர்கள் 13,829 பேர் எழுத உள்ளனர்.

தேனி மாவட்ட அணைகளின் (பிப்.05) நீர்மட்டம்: வைகை அணை: 65.06 (71) அடி, வரத்து: 230 க.அடி, திறப்பு: 519 க.அடி, பெரியாறு அணை: 119.95 (142) அடி, வரத்து: 117 க.அடி, திறப்பு: 556 க.அடி, மஞ்சளார் அணை: 44.40 (57) அடி, வரத்து: 23 க.அடி, திறப்பு: 75 க.அடி, சோத்துப்பாறை அணை: 103.48 (126.28) அடி, வரத்து: 6 க.அடி, திறப்பு: 25 க.அடி, சண்முகா நதி அணை: 36 (52.55) அடி, வரத்து: 4 க.அடி, திறப்பு: 14.47 க.அடி

தேனி மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்த 2,957 விண்ணப்பங்கள் ‘சூப்பர் செக்கிங்’ எனும் தீவிர சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது. 2024 ஜூன் – நவம்பர் வரை 3000 ற்கும் அதிகமானோர் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்திருந்தனர் விண்ணப்பங்களை தாலுகா அலுவலங்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலர்கள் சரிபார்த்தனர். தேனி 283, பெரியகுளம் 744, போடி 393, ஆண்டிபட்டி 748, உத்தமபாளையம் 789 என தேர்வாகி உள்ளது.

தேனி, கம்பம் கோம்பை சாலையைச் சோ்ந்த மதியழகன் மகன் மனோஜ் (32). இவர் தீபிகா என்பவரை(30) கடந்த 2014-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தாா். இந்தத் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா். மனோஜுக்கும், தீபிகாவுக்கு அடிக்கடி உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த தம்பதியினர் நேற்று (பிப்-4) வீட்டில் விஷம் குடித்தனா். அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

தேனி மாவட்டத்தில் இன்று 04.02.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இன்று மாலை அங்கு அறப்போராட்டம் நடத்த போவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்து இருந்தனர். இதனை தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் தேனியில் பாரதிய ஜனதா கட்சியினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறையினரால் கைது செய்து மினி பஸ்ஸில் ஏற்றினர்.

மதுரை – போடி இடையிலான ரயில்பாதை மின்மயமாக்கப்பட்டு சோதனை ஓட்டம் நிறைவடைந்துள்ளது.இதையடுத்து இன்று (பிப். 4) முதல் சென்னை சென்ட்ரல் – போடி – சென்னை சென்ட்ரல் (20601/20602), மதுரை – போடி பாசஞ்சர் (56701/56702) ஆகிய ரயில்கள் மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மின்சார ரயில் வருவதினால்பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தில் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் படை வீரர்கள் பாதுகாப்பான வாழ்க்கையில் உறுதி செய்திடவும் அவரது வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும் முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக முன்னாள் ராணுவ வீரர்கள், முன்னாள் படை வீரர்கள் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.