India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டத்தை உள்ளடக்கி வருகிற அக்.9ந் தேதி மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் மண்டல அளவிலான வேலைவாய்ப்பு & தொழிற் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் கலந்துகொள்ள, வேலைநாடும் மாற்றுத்திறனாளிகள் & வேலைவாய்ப்பளிக்க விரும்பும் நிறுவனங்கள், அக்.7 வரை, அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 05.30 மணி பார்க்கலாம்.
தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம், தாமரைக்குளம் பிட்-1 கிராமம் (உட்கடை) டி.கள்ளிப்பட்டி, கிராம நத்தம் என்ற வகைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலங்களில் குடியிருந்து வருபவர்கள் நில அளவை பணியாளர்கள் வரும்போது உரிய ஆவணங்களை அந்த அலுவலரிடம் காண்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்து உள்ளார்.
தேனி மாவட்டம் மது, போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை ஆகியவற்றை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதனை விற்பனை செய்யக்கூடாது என அனைத்து கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் கடைகள், கல்வி வளாகங்கள் அருகில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்தால் முதல் முறை அவர்களுக்கு அபராதமாக ரூ.5 ஆயிரம் விதிக்கப்படும் எனவும். மீண்டும் விதிகளை மீறினால் தினமும் ரூ.400 வீதம் அபராதமும், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பி.டி.ஓ.,க்கள் தினசரி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார்.
தேனி மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதா அல்லது மாற்று விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதா என தொழிலாளர் நலத்துறை அமலாக்கப் பிரிவு உதவி ஆணையர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 51 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 36 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. அந்நிறுவனங்களுக்கு ரூ.12,900 அபராதம் விதிக்கப்பட்டது.
தேனி மாவட்டம் சுருளி அருவியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலா துறை இணைந்து நடத்தும் சுருளி சாரல் திருவிழா 2024 நிறைவு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேனி எம்.பி தங்க தமிழ் செல்வன், ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மகாராஜன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
சிதம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார். தனது தந்தையை காணவில்லை என 15.06.2019 அன்று சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில் சீலையம்பட்டி அஜ்மல்கான் (40) மனைவிக்கும் வினோத் குமாருக்கும் தொடர்பு காரணமாக கருணாநிதியை ஊருக்கு வரவழைத்து கொலை செய்தது தெரிந்தது. வழக்கின் முடிவில் நேற்று(அக்.01) தேனி அமர்வு நீதிபதி கோபிநாத் அஜ்மல்கானுக்கு ஆயுள் தண்டனை வழங்கினார்.
அன்னஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (45). கடந்த 18.9.2013 அன்று தன் மீது ஆசிட் வீசியதாக செந்தில்குமார் (38) அல்லிநகரம் போலீசில் புகார் அளித்தார். பிறகு போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்த வழக்கு தேனி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று (அக்.1) நீதிபதி அறிவொளி ரவிக்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையை வழங்கி தீர்ப்பளித்தார்.
தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு நாளை (அக்.2) காலை 11 மணி அளவில் கிராம சபை கூட்டம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகள் மற்றும் குறைகளை மனுக்களாக வழங்கி தீர்வு காணலாம் என தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் மகனும் தேனி முன்னாள் எம்.பியுமான ரவீந்திரநாத் எடப்பாடி பழனிச்சாமி மீது செல்போன் கொண்டு தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல் மற்றும் கருத்து வேறுபாடுகளுக்கு பின்னால் இருந்து வந்தாலும், நம்முடைய மரியாதையும் சீர்திருத்தமும் குறைய கூடாது. இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.