India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வடுகப்பட்டியைச் சேர்ந்தவர் வேதமூர்த்தி. இவர் அரசு கல்லூரியில் 1 ஆம் ஆண்டு படித்து வந்தார். நேற்று வழக்கம் போல் கல்லூரி செல்ல தனியார் பேருந்தில் ஏறி முன் வாசல் படிக்கட்டில் நின்று பயணம் செய்தார். சக்கம்பட்டி அருகே பேருந்து வளைவில் திரும்பும் போது கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு சம்பந்தமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று தமிழகம்-கேரளா எல்லை பகுதியான குமுளி பகுதியில் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா, கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷீபா ஜார்ஜ் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராம்நாடு, நாமக்கல், நீலகிரி, திருச்சி, பெரம்பலூர், சேலம், கரூர், மதுரை, விருதுநகர், தென்காசி, புதுக்கோட்டை மற்றும் நெல்லை ஆகிய 15 மாவட்டங்களில் இன்று மாலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டத்திற்கான நேற்றைய (ஏப்.12) மழைப்பொழிவு விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. போடிநாயக்கனூரில் 6 செ.மீட்டரும், மஞ்சளார், சோத்துப்பாறை, பெரியகுளம் பகுதிகளில் 3 செ.மீட்டரும் பதிவாகியுள்ளது.
போடி நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கண்ணன் சக போலீசாருடன் போதை பொருள் தடுப்பு சம்பந்தமாக ரோந்து சென்றார். அப்போது தேவர் சிலை அருகே வாகன தணிக்கை செய்தபோது பெரோஸ்கான், சுதாகர் ஆகியோர் வந்த டூவீலரை சோதனை செய்தார். சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.18920 மதிப்புள்ள 35 கிலோ குட்கா பொருட்கள், அதை விற்ற பணம் ரூ.30000 ஆகியவற்றை கைப்பற்றி போலீஸார் இருவரை கைது செய்தனர்.
தேனி மக்களவை தொகுதியில் சிலமலையை சோ்ந்தவர் விக்கிதேவன், குமணன்தொழுவை சோ்ந்த சிவமாயன் ஆகியோா் தங்களது தபால் வாக்கைப் பதிவு செய்து வெற்றி வாக்கு என்று தலைப்பிட்டு தங்களது முகநூல் பக்கத்தில் பகிா்ந்துள்ளனா்.இவா்கள் இருவா் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டத் தோ்தல் பிரிவு சாா்பில் மாவட்டக் காவல் துறை நிா்வாகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இவர்கள் இருவர் மீது நேற்று வழக்கு பதியப்பட்டுள்ளது.
முல்லைப்பெரியாறு அணையில் ஜன.17ல் நீர்மட்டம் அதிகபட்சமாக 139 அடியை எட்டியது. அதன் பின் கடந்த 3 மாதங்களாக மழையின்றி நீர்பிடிப்பு பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவுவதால் நீர்வரத்து குறைந்தது. இன்று (ஏப்.13) காலை 6 மணி நிலவரப்படி 115.20 அடியாக உள்ளது. தற்போது அணையில் இருந்து குடிநீருக்காக மட்டும் 105 கன அடி நீர் குமுளி மலைப்பாதையில் உள்ள இரைச்சல் பாலம் வழியாக திறக்கப்பட்டுள்ளது.
சின்னமனூரை சேர்ந்தவர் காதா் மைதீன்(65). இவா் கடந்த ஏப்.9 அன்று இரு சக்கர வாகனத்தில் சீலையம்பட்டியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பினாா். அப்போது அவர் புறவழிச் சாலையைக் கடக்க முயன்ற போது கம்பத்தை நோக்கி சென்ற மினி லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இது குறித்து சின்னமனூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
2024 மக்களவை தேர்தலையொட்டி தேனி மாவட்டம் முழுவதும் ஆட்சியர் ஷஜீவனா மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில், 100கி.மீ. நடைபயணத்தின் 6-ம் நாளான
இன்று (12.04.2024) தேர்தல் விழிப்புணர்வு வாசகத்துடன் குடையினை பிடித்தபடி ஆட்சியர் விழிப்புணர்வு செய்தார். இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி உள்ளிட்ட பலர் இருந்தனர்.
தேனி மாவட்டம் கம்பம் கௌமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 5ஆம் தேதி வரை 21 நாட்கள் வெகு விமர்சியாக நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து கம்பம் நகராட்சி ஆணையர் வாசுதேவன், தேனி மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர் ஜெயபாண்டியன் ஆகியோர் விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினர்.
Sorry, no posts matched your criteria.