India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடும்பாறையைச் சேர்ந்தவர் விக்ரம். இவர் கடமலைக்குண்டில் இருந்து மயிலாடும்பாறை நோக்கி டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த கார் டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த விக்ரமின் தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் தேனி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். கடமலைகுண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.
தேனி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஜீவானந்தம் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, தேனி புதிய பேருந்து நிலையம் அருகே தேனியைச் சேர்ந்த பாண்டீஸ்வரன் என்பவர், தேர்தல் நாளில் மதுக்கடைகள் அடைத்திருந்த நிலையில், கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்றுக் கொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து சோதனையிட்டதில் 12 மது பாட்டில்கள் அவரிடம் கைப்பற்றப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார்.
தேனி மக்களவை தொகுதியில் காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தேனி மக்களவை தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் மதியம் 1:00 மணி நிலவரப்படி சோழவந்தான் 44.63%, உசிலம்பட்டி 42.82%, ஆண்டிபட்டி 36.04%, பெரியகுளம் 39.86%, போடிநாயக்கனூர் 44.74%, கம்பம் 40.3% என மொத்தமாக 41.28% வாக்குப்பதிவு நிறைவு பெற்றதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தேனி பாராளுமன்ற மக்களவை தொகுதி பொதுத்தேர்தல் இன்று காலை 7:00 மணி முதல் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காலை 11 மணி நிலவரம் படி சோழவந்தான் 27.98% உசிலம்பட்டி 26.61% ஆண்டிபட்டி 20.71% பெரியகுளம் 25.10% போடிநாயக்கனூர் 28.73% கம்பம் 25.85% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தகவல் தெரிவித்துள்ளார்.
தேனி பாராளுமன்ற தொகுதியில் காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு விருவிருப்பாக நடைபெற்று வரும் நிலையில், தேனி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் காலை 9:00 மணி நிலவரப்படி சோழவந்தான் 11.23%, உசிலம்பட்டி 5%, ஆண்டிபட்டி 8%, பெரியகுளம் 9.8%, போடிநாயக்கனூர் 16%, கம்பம் 2.19% என மொத்தமாக 8.59% வாக்குப்பதிவு நிறைவு பெற்றதாக மாவட்ட நிர்வாகம் தகவல்.
முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் 152 அடி. உச்ச நீதிமன்ற உத்தரவின் படி 142 அடி வரை நீர்த்தேக்கம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் தற்போது கோடை வெயில் வாட்டி வதைக்கும் வேளையில் அணையின் தற்போதைய நீர்மட்டம் 115. 25 ஆக உள்ளது. வைகை அணையின் மொத்த உயரம் 71 அடி. தற்போதைய நீர்மட்டம் 59.25 அடியாக உள்ளது. ஐந்து மாவட்டங்கள் இதன் மூலமாகத்தான் குடிநீர் மற்றும் பாசன வசதி பெறுகிறது.
தேனி மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பறக்கும் படையினர் மற்றும் நிலையான சோதனை சாவடிகள் மூலம் சோதனை நடைபெற்று வருகிறது. இதில், மார்ச் 18 முதல் இன்று வரை ரூ.1,59,60,515 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சரியான ஆவணங்கள் சமர்ப்பித்ததின் பேரில் ரூ.1,52,08,330 திரும்ப கொடுக்கப்பட்டுள்ளது. மீதம் ரூ. 7,52,185 கருவூலங்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் நாளை (ஏப்.19) மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் வெள்ளிமலையில் ஆறு வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களுக்கு அப்பகுதியில் உள்ள துரைச்சாமி மரகதம் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளியில் வாக்குச்சாவடி செயல்படுகிறது. அந்த ஆறு வாக்காளர்கள் வாக்களிக்க தேர்தல் பணியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் 5 பேரும், அவர்களுடன் போலீசாரும் பணியாற்ற உள்ளனர்.
தேனி மாவட்டத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். இந்நிலையில், தேனியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு – மாலை 7 மணி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கம்பம், போடி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பூத் எண்.40 ஜக்கம்பட்டி இந்து மேல்நிலைப்பள்ளி, பெரியகுளத்தில் பூத் எண்.10 வடகரை அரசு மேல்நிலைப்பள்ளி, போடியில் எண்.116 அரசு மேல்நிலைப்பள்ளி மேலசொக்கநாதபுரம், எண்.208 பி.சி.பட்டி பழனியப்பா பள்ளி, கம்பம் தொகுதியில் 176 உத்தமபாளையம் அல்ஹிமா பள்ளியில் பிங்க் ஓட்டுச்சாவடிகள் அமைகின்றன. இவற்றில் பெண் அதிகாரிகளே முழுவதும் பணிபுரிவார்கள்.
Sorry, no posts matched your criteria.