Theni

News April 28, 2024

கெளமாரியம்மனுக்கு சிறப்பு பூஜை

image

தேனி மாவட்டம் வீரபாண்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கெளமாரியம்மன் கோவில் உற்சவ திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இதனை அடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

News April 27, 2024

பேபி புடலங்காய் விலை உயர்வு

image

கம்பம் அருகே உள்ள காமயவுண்டன்பட்டி நாராயணதேவன் பட்டி உள்ளிட்ட கிராமங்களில் கிணற்று பாசனம் மூலம் புடலங்காய் முட்டைக்கோஸ் பீட்ரூட் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில் பேபி புடலங்காய் தற்போது நல்ல விலை கிடைத்துள்ளதாக விவசாயி சங்கிலி தெரிவித்தார். கிலோ மூன்று ரூபாய்க்கு எடுத்து வந்த நிலையில் தற்போது கிலோ ரூபாய் 15க்கு வாங்கி செல்கின்றனர் என மகிழ்ச்சியாக தெரிவித்தார்.

News April 27, 2024

வைகை அணையின் நீர்மட்டம் 57.41 அடியாக குறைவு

image

ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாத காரணத்தால் நீர்வரத்து அடியோடு நின்று விட்டது. மேலும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைந்து விட்டது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து தற்போது 57.41 அடியாக குறைந்து காணப்படுகிறது.

News April 27, 2024

கோடைகால பயிற்சி முகாம்

image

தேனி மாவட்டத்தில் உறைவிடம் சாரா கோடைக்கால பயிற்சி முகாம் 15 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் கபடி, கால்பந்து, வாலிபால், கூடைப்பந்து, ஹாக்கி போட்டிகள் 29.04.24 முதல் 13.05.24 வரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடத்தப்படவுள்ளது. அதற்கு பயிற்சி கட்டணம் ரூ.200 வீதம் ஆன்லைன்/Pos machine மூலமாக மட்டுமே பெறப்படும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை 7401703505 தொடர்பு கொள்ளலாம்.

News April 27, 2024

ஆட்டுக் கொல்லி நோய் முகாம்

image

தேனியில் 46,144 செம்மறியாடுகளும் 60,081 வெள்ளாடுகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்திலுள்ள 53 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 3 கால்நடை மருத்துவமனைகளில் கால்நடை உதவி மருத்துவர், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட 53 குழுக்கள் அமைத்து, ஏப் 29 முதல் மார்ச் 28 வரை 30 நாட்களுக்கு தடுப்பூசிப் பணி இலவசமாக மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News April 26, 2024

பன்றிக்காய்ச்சல் நோய் தடுப்பூசி முகாம் 

image

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் அதிகபட்சமாக வெண்பன்றி வகைகள் பெரிய அளவில் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இத்தடுப்பூசி பணி மூன்று மாத வயதிற்கு மேல் உள்ள சினையற்ற பன்றிகளுக்கு மே 23 வரை கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தடுப்பூசி போடப்படவுள்ளது . இத்தடுப்பூசியை செலுத்துவதால் பன்றிகளுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாது. 

News April 26, 2024

ஆண்டிபட்டி: மொய் தகராறில் மோதல்

image

ஆண்டிபட்டி அடுத்துள்ள ராஜதானி அருகே மொய் செய்யவில்லை எனக்கூறி தகராறு ஏற்பட்டுள்ளது.  ராஜசேகரன் தனது வீட்டு முன்பு பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த பாண்டியம்மாள் சன்னாசி உறவினர்கள் நடராஜன் தலைமலை வெள்ளைச்சாமி மற்றும் நான்கு பேர் சேர்ந்து ராஜசேகரனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பதிலுக்கு ராஜசேகரன் மற்றும் குடும்பத்தினரும் அவர்களை தாக்கியதால் போலீசார் 14 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

News April 26, 2024

தேனி அருகே விபத்து: கவலைக்கிடம்

image

பெருமாள்கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் பிரபு. இவர் நேற்று தனது பைக்கில் டொம்புச்சேரி அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே குணசேகரன் என்பவர் ஓட்டி வந்த பைக் மோதி இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர்.  இருவரில் பிரபு என்பவர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். குணசேகரன் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.

News April 26, 2024

தேனி: வறண்டு போன சுருளி அருவி

image

தேனி கம்பம் அருகே உள்ள சுருளி மலையில் கைலாசநாதர் கோயில் பூத நாராயண கோவில் அமைந்துள்ளது. இந்த சுருளி அருவி தமிழ்நாட்டின் மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு மக்கள் அனைவரும் வருகை வந்து தன் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் செய்து அருவியில் குளித்து நீராடி செல்வது வழக்கம். தற்போது வெயிலின் அளவு அதிகரித்துள்ளதால் சுருளி அருவி வறண்டு காணப்படுகிறது.

News April 26, 2024

தேனியில் மதிக்கத்தக்க ஆங்கிலேயரின் மணிமண்டபம்!

image

பென்னிகுவிக் மணிமண்டபம் கூடலூர் அருகே லோயர்கோம்பட் பகுதியில் அமைந்துள்ளது. இது மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய மாவட்டப் பகுதிகளின் விவசாயத்திற்கும், பாசன வசதிக்காகவும் முல்லை பெரியார் அணையைக் கட்டிய ஆங்கிலேயர் ஜான் பென்னிகுவிக் நினைவாக கட்டப்பட்டது. 1895ஆம் ஆண்டு ராணுவ பொறியாளராக இந்தியாவிற்கு வந்த அவர், வறட்சியைக் கண்டு பெரியார் ஆற்றில் பல தடைகளைத் தாண்டி இவ்வணையைக் கட்டினார்