Theni

News April 29, 2024

தேனியில் 1.43 லட்சம் மருந்துகள் இருப்பு

image

தேனி மாவட்டத்தில் 1.06 லட்சம் செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகள் இருப்பதாக
கணக்கிடப்பட்டுள்ளது. அதற்கு கால்நடை நலம் மற்றம் நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், தடுப்பூசி செலுத்துவதற்கு ஏதுவாக 1.43 லட்சம் மருந்துகள் வரவழைக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்கப்பட்டு 30 நாட்களுக்கு இப்பணிமேற்கொள்ளப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News April 29, 2024

தேனி: 2329 காலி பணியிடங்கள் அறிவிப்பு

image

தமிழகத்தில் உள்ள மாவட்ட கோர்ட்டுகளில் 2329 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது விருப்பம்போல் எதாவது ஒரு மாவட்டத்தை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். அதன்படி தேனி மாவட்ட நீதித்துறையில் 32 காலியிடங்கள் உள்ளன. இதில் விண்ணப்பிக்க<> https.//www.mhc.tn.gov.in <<>>என்ற இணைய தளத்தில் மே.27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

News April 29, 2024

தேனி: கலெக்டர் அதிரடி உத்தரவு

image

தேனியில் பதிவான வாக்குகள் கம்மவார் சங்கம் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியை சுற்றி 2 கி.மீ தொலைவிற்கு ட்ரோன்கள் பறக்க கலெக்டர் ஷஜீவனா தடை விதித்துள்ளார். மேலும் வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும்,தடையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

News April 29, 2024

விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு நற்செய்தி

image

விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர் விளையாட்டுத் துறையில் சாதனைகளை படைக்க பயிற்சி, தங்குமிடம், சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் உள்ளது. இதில் சேர்ந்து பயிற்சி பெறுவதற்கான தேர்வு போட்டி நடைபெற உள்ளது. மேலும் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மையம்  9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரம் பெறலாம் என தேனி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News April 29, 2024

அரிவாள் மனையால் தாயின் கழுத்தை அறுத்த மகன் கைது

image

கெங்குவார்பட்டி அருகே வத்தலகுண்டு மெயின் ரோட்டில் அழகரம்மாள் என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். நேற்று இவரது மூத்த மகன் விஜய் என்பவர் ஹோட்டலுக்கு வந்து சொத்தை பிரித்து தரக்கோரி தகராறு செய்து அங்கிருந்த அரிவாள் மனையை எடுத்து அழகரம்மாவின் கழுத்தில் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் தேனி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தேவதானப்பட்டி போலீசார் விஜயை கைது செய்துள்ளனர்.

News April 29, 2024

தேனி: பெண்ணை தாக்கிய கும்பல்

image

கெங்குவார்பட்டியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் காட்ரோட்டில் டீக்கடை நடத்தி வருகிறார். 6 மாதங்களுக்கு முன்பு பால்பாண்டி என்பவரிடம் ரூ.5 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கி அதில் ரூ.1 லட்சத்தை திருப்பிக் கொடுத்துள்ளார். மீதி பணத்தை ஒரு சில நாட்களில் கொடுப்பதாக தெரிவித்த நிலையில் பால்பாண்டி சிலருடன் வந்து பணத்தை உடனே தரும்படி கூறி மகேஸ்வரியின் தாக்கியுள்ளார்.

News April 28, 2024

தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி

image

வீரபாண்டி மாரியம்மன் கோயில் திருவிழா மே 7 முதல் மே 14 வரை நடக்கிறது. பக்தர்களுக்கு தேவையான முன்னேற்பாடு பணிகள் கோயில் நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடந்து வருகிறது. திருவிழாவிற்காக பெரியகுளம், தேனி, ஆண்டிப்பட்டி, போடியில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பஸ்கள் நிற்பதற்கான தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி இன்று துவங்கியது.

News April 28, 2024

தேனி: பொதுமக்களுக்கு கோரிக்கை வைத்த நகராட்சி

image

தேனி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்க கூடிய பொதுமக்களுக்கு வைகை ஆற்றில் உள்ள உறை கிணறுகள் மற்றும் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோடை வெயிலின் தாக்கத்தின் காரணமாக ஆறுகளில் நீர் வரத்து குறைந்துள்ளதால் அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்க கூடிய பொதுமக்கள் குடிநீரினை சிக்கனமாக பயன்படுத்துமாறு நகராட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

News April 28, 2024

தேனி அருகே ஒருவருக்கு கத்தி குத்து 

image

தேனி மாவட்டம் அய்யம்பட்டியில் கோயில் திருவிழாவையொட்டி நேற்று முன் தினம் (ஏப்.26) இரவு ஆடலும், பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட தகராறில் கமலேஷ் (18) என்பவரை சுதாகா், அவரது தந்தை பாரதிராஜா உள்ளிட்ட 7 பேர் தாக்கி, கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரில் சின்னமனூர் போலீசார் சுதாகர்,அவரது தந்தை பாரதிராஜாவை நேற்று (ஏப்.27) கைது செய்தனா்.

News April 28, 2024

முதலமைச்சரின் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு 

image

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் பொருட்டு முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 3 ஆண்கள், 3 பெண்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் விருது, ரூ 1,00,000 ரொக்கம், பாராட்டுப் பத்திரம், பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும். 15 முதல் 35 வயது வரையுள்ளவர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.