India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி, வீரபாண்டியில் அமைந்துள்ளது 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கௌமாரியம்மன் கோயில். முக்கியமாக கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் நோய்களுக்காக இங்கு பலரும் வழிபாடு செய்து வழக்கமாக இருந்து வருகிறது. சித்திரை, வைகாசியில் தேனியின் முக்கிய திருவிழாவாக இந்த கோயில் திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவின் போது 24 மணி நேரமும் கோயிலில் வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.
தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், வடுகபட்டி வள்ளுவர் தெரு உறவினர்முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழாவில் மறுபூஜையை முன்னிட்டு அம்மன் ஊஞ்சலாடும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. மேலும் கடந்த ஆண்டில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த 3 மாணவர்களுக்கு ஊக்கத்தொகையை விழா குழுவினர் வழங்கி கௌரவப்படுத்தினர்.
கம்பத்தில் இறைவி சம்ஸ்கிருத நுண்கலைப்பள்ளி சாா்பில் திருநாவுக்கரசர் குருபூஜை, சதிா் சலங்கை விழா நேற்று (மே.3) நடைபெற்றது. இதில் பங்கேற்ற மதுரை ஆதீனம், சலங்கை பூஜை மாணவியர்களை வாழ்த்திக் கலையும், கலாச்சாரமும் வளர்ப்பதற்கு மாணவா்கள், பெற்றோா்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா். மேலும் அவர் செய்தியாளர்களிடம், மீண்டும் நரேந்திர மோடிதான் மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராவார் என்றார்.
கொடுவிலார்பட்டியைச் சேர்ந்தவர் வேல்முருகன். சிவலிங்க நாயக்கன்பட்டி விளக்கு அருகே உள்ள 22 வருடங்களாக அவருக்கு சொந்தமான நிலத்திற்கு வேலி அமைக்க முற்பட்டார். அப்போது கொடுவிலார்பட்டியை சேர்ந்த காந்தி, ரேவதி, மகாலட்சுமி ஆகியோர் அது தங்களது நிலம் என்று கூறி வேல்முருகனை கல்லால் அடித்து கையில் வைத்திருந்த அரிவாளால் வெட்ட முயன்றனர். வேல்முருகன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
தேனியில் யூ-ட்யூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். யூ டியூபர் சவுக்கு சங்கரை கைது செய்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட சவுக்கு சங்கரை கோவைக்கு அழைத்து செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று தேனி மாவட்டம்
கம்பத்தில் இறைவி சம்ஸ்கிருதி நுன்கலைப்பள்ளி சார்பாக திருநாவுக்கரசர் குருபூஜை விழா, சதங்கை விழா நடைபெற்றது.
விழாவில் மதுரை ஆதினம்
293வது பீடாதிபதி பூஜனீய ஸ்ரீலஸ்ரீஹரிஹர ஞானசம்பந்ததேசிக பரமாச்சாரியசுவாமிகள்
கலந்துகொண்டு சிறப்பித்தார். நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் மாவட்ட நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இரவு 10 மணி வரை தேனி மாவட்டத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தேனி (வடக்கு) நகர அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று அல்லிநகரம் பகுதியில் நீர் மோர் பந்தலை தேனி (வடக்கு) மாவட்ட செயலாளர் காசிமாயன் திறந்து வைத்து, தர்பூசணி பழங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வின்போது, தேனி வடக்கு நகர செயலாளர் குரு கணேசன் தலைமை வைத்தார். கழக அமைப்புச் செயலாளர் கதிர்காமு முன்னிலை வைத்தார். உடன் தேனி நகர பொறுப்பாளர்கள் உள்ளனர்.
தேனி அருகே மதுராபுரி காலனி பகுதியைச் சோ்ந்தவா் ஜக்கன். இவர் தேனி – பெரியகுளம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது மதுராபுரி விலக்கு அருகே பெரியகுளத்திலிருந்து தேனி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஜீப் ஜக்கன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். அல்லிநகரம் போலீசார் நேற்று (மே.2) வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
அம்சாபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார்.இவர் நேற்று வேல்நகரில் நடைபெற்ற கோயில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு தனது உறவினர் முத்து என்பவருடன் டூவீலரில் திரும்பிக் கொண்டிருந்தார். சில்வார்பட்டி பிரிவு அருகே வேகமாக சென்ற டூவீலர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முத்து மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.