India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சாகுபடி செய்யாத தஞ்சாவூர், பூதலூர் உள்ளிட்ட 45 கிராமங்களுக்கு முதற்கட்டமாக 22.44 கோடி பயிர் காப்பீடு வழங்கப்பட்டது. தொடர்ந்து மகசூல் இழப்பால் பாதிக்கப்பட்ட 175 கிராமங்களை 20.69 கோடி பயிர் காப்பீடு வழங்கப்பட்டது. கடந்த 2023 – 2024 ஆம் ஆண்டில் மட்டுமே 43.12 கோடி பயிர் காப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார்கோவில் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக கமல்ஹாசன் (34) என்பவர், தனது அண்ணன் மனோகரனை (43) கட்டையால் தாக்கி கொலை செய்தார். மது அருந்தியபோது இருவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதம் திடீரென மோதலாக மாறியது. மனோகரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 29-ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து, காவல்துறை கமல்ஹாசனை கைது செய்தனர்.
திருவிடைமருதூர் அருகே திருநறையூர் ராமநாதசுவாமி கோயிலில் சனி பகவான் குடும்பத்துடன் அருள்பாலிக்கிறார். இந்த கோயிலுக்கு நடிகர் ஸ்ரீமன் தனது மனைவியுடன் நேற்று வருகை தந்து சனி பகவானுக்கு அர்ச்சனை செய்தார். கோயில் அர்ச்சகர் ஞானசேகர் சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஸ்ரீமனுக்கு கோயில் சார்பில் மரியாதை செய்யப்பட்டது, அவரை காண பொதுமக்கள் கூடினர்.
தஞ்சாவூர் ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தின் கீழ் விவசாய தொழிலாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் விவசாய விளைநிலங்கள் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் குறைந்த வட்டியில் வங்கி கடன் வழங்கப்படுகிறது. தகுதியுடையவர்கள் www.tahdco.com இணையதளத்தில் விண்ணபிக்கலாம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 2023 – 2024 ஆண்டிற்கு ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் மூலம் 4,800 மெட்ரிக் டன் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நன்கு உலர வைக்கப்பட்ட 12% ஈரப்பதம் கொண்ட உளுந்து கிலோ 74 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும். 25.09.2024 (மு) 23.12.2024 வரை 90 நாட்கள் வரை உளுந்து கொள்முதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
நாளை (அக்.2) காந்திஜெயந்தியை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் இயங்கி வரும் விற்பனை மதுபான கடைகள், அதனுடன் 2 மதுபான கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற விடுதிகளின் இணைந்த மதுக்கூடங்கள் ஆகியவை அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.
தஞ்சாவூர் கரந்தையை சேர்ந்தவர் அறிவழகன் (33). இவர் மீது கஞ்சா, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன். இந்நிலையில் கடந்த 25ஆம் வடவாற்றங் கரையில் மது அருந்தும் போது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து திவாகர், பார்த்திபன், ஷ்யாம், திலீப்குமார், செல்வகுமார், ஹரிஹரன் உள்ளிட்ட ஏழு பேரை இன்று கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 10.9.2024 முதல் 3 மாதங்களுக்கு அரவை கொப்பரை கொள்முதல் செய்யப்பட உள்ளது. இந்தாண்டு ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் மூலம் அரவை கொப்பரை 8,164 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தரமான கொப்பரை கிலோவிற்கு ரூ.111.60 க்கு கொள்முதல் செய்யப்படும். விவசாயிகள் இதில் பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்தின் கீழ் ஆராய்ச்சி படிப்பு பயிலும் (பிஎச்டி) மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒரு லட்சம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. தகுதி உடையவர்கள் தகுந்த ஆவணங்களுடன் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தஞ்சை மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபான கடைகள், அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற விடுதிகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் காந்தி ஜெயந்தியையொட்டி நாளை அடைக்கப்பட்டு மது பானம் விற்பனை செய்யப்படமாட்டாது என்று அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.