India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் எலுமிச்சைபழத்தின் வரத்து குறைவால், விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ரூ.60-க்கு விற்ற எலுமிச்சைப்பழம், தற்போது விளைச்சார் குறைவால் கிலோ ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பட்டுக்கோட்டை காசாங்குளம் மேல்கரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் வெண்ணெய்த்தாழி திருவிழா நேற்று(ஏப்.30) நடந்தது. இதை முன்னிட்டு சாமி வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வீதி உலாவில் ராஜபாளையம் தெருவில் உள்ள நவநீதகிருஷ்ணன் மடம் சார்பில் பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு பட்டு சாத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பாபநாசம் தாலுகா வழுத்தூர் கிராமத்தில் ஹாஜியார் தெருவில் 30க்கும் மேற்பட்ட குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து, அங்குள்ள பொருட்களை எடுத்து தின்று அட்டகாசம் செய்து வந்தன. இது குறித்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி உத்தரவின் பேரில், இன்று(ஏப்.30) வழுத்தூர் கிராமத்தில் 2 கூண்டு வைத்து 20 குரங்குகளையும் பிடித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை பகுதியை சேர்ந்த ரமேஷ்(50). இவருக்கு மணிகண்டன்(28) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மணிகண்டன், ரமேஷ் இடையே ஏப்.28ம் தேதி இரவு தகராறு ஏற்பட்டு இருவரும் தாக்கிக் கொண்ட நிலையில், இரவு 1 மணியளவில் மணிகண்டன் உயிரிழந்துள்ளார். இதையடுத்து ரமேஷை நேற்று(ஏப்.29) அதிராம்பட்டினம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தஞ்சாவூரில் நேற்று (ஏப்.29) 104 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் தஞ்சாவூர் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை, 39° – 43° செல்சியஸ் பதிவாகக்கூடும்.
பாபநாசம் தாலுகா நாகலூர் கிராமத்தில் உள்ள விஷ மீண்ட மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று(ஏப்.29) வெட்டாற்றில் இருந்து 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், செடில் காவடி, பறவை காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தனர். தொடர்ந்து அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள், தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஒவ்வொரு அரையாண்டு ஆரம்ப தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் சொத்து வரியை செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதன் மூலம் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம். தற்போது முதல் அரையாண்டு சொத்து வரி செலுத்த நாளை (செவ்வாய்க்கிழமை) கடைசி நாளாகும் என்றார்.
தஞ்சாவூர் மாவட்ட நீதித்துறையில் 66 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி இடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.mhc.tn.gov.in/recruitment/notification_dist தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை மே 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார்கோவில், மாத்தூர் கிராமத்தில் நேற்று இளைஞர்களுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த போட்டியின்போது சாம்சன் ராஜ்(22) என்ற தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுரேந்தர்(25) ஆகிய 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் சுரேந்தர் கத்தியால் சாம்சன் ராஜை குத்தினார். புகாரின் பேரில் சுரேந்தரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கும்பகோணம் மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மங்களம் என்ற யானை உள்ளது. 44 ஆண்டுகளாக, கோவில் நிர்வாகத்தால் இந்த யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மங்களம் யானையின் முழுமையான பராமரிப்பு செலவினத்திற்கான மாதந்தோறும் ரூ.60,000 வீதம் ஆண்டுக்கு ரூ.7 லட்சத்து 20 ஆயிரத்தை தனியார் நிதி நிறுவனம் நன்கொடையாக வழங்கியது.
Sorry, no posts matched your criteria.