India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 14,402 மாணவர்கள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய நிலையில் 13,032 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் 14,513 மாணவிகள் தேர்வு எழுதி 13,974 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்தம் 28,915 பேர் தேர்வு எழுதி 27,006 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம் தஞ்சாவூர் மாவட்டம் 93.40% சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.40% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 90.49% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 96.29% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
திருவோணம் அடுத்த ஊரணிபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். பட்டதாரியான இவர் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தார். மோட்டார் சைக்கிளில் திருவோணத்தில் இருந்து ஊரணிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் இவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுக்கூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பத்மாவதி (54). இவரது கணவர் சம்பத். இவர் வீட்டுக்கு அருகிலேயே விறகு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அளவில் கதவை திறந்துவைத்து பத்மாவதி தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் கழுத்தில் கிடந்த 7 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் மதுக்கூர் போலீசார் மர்மநபரை வலைவீசி தேடிவருகின்றனர்.
கும்பகோணம் கொரநாட்டு கருப்பூரை சேர்ந்தவர் அருண்(19). இவர் நேற்று பாபநாசம் அருகே வளத்தாமங்கலத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் மீண்டும் ஊருக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது வளத்தாமங்களம் மெயின் ரோட்டில் வந்த போது நிலை தடுமாறி மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (மே.09) நண்பகல் 1 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும். கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று(மே 9) காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து ஆணையரின் சுற்றறிக்கையின்படி, உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறையின்படியும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்கள், அவசர நேர கதவுகள், முதலுதவி பெட்டிகள் உள்ளிட்டவைகள் இருக்கிறதா என்பது குறித்து மே 11ம் தேதி தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் ஆய்வு செய்யப்படும் என கலெக்டர் தீபக் ஜேக்கப் அறிவித்துள்ளார்.
போக்குவரத்து ஆணையரின் சுற்றறிக்கையின்படி, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறையின்படியும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்கள், அவசர நேர கதவுகள், முதலுதவி பெட்டிகள் உள்ளிட்டவைகள் இருக்கிறதா என்பது குறித்து வருகிற 11-ம் தேதி தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் ஆய்வு செய்யப்படும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கம் சார்பாக, தஞ்சாவூர் மாவட்ட சதுரங்க சங்கம் ஏற்பாட்டில், கும்பகோணம் சட்டமன்ற தொகுதி, கோவிலாச்சேரியில் அமைந்துள்ள அன்னை பொறியியல் கல்லூரியில், 36வது தமிழ்நாடு மாநில அளவிலான 13 வயத்திற்குட்பட்டவர்களுக்கான “சதுரங்க சாம்பியன்ஷிப் 2024” போட்டி இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் தொடங்கி வைத்து, வாழ்த்துரை வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.