Thanjavur

News May 12, 2024

தஞ்சை: ஆர்ப்பாட்டம் நடத்திய 65 பேர் கைது

image

நிற வெறியை தூண்டும் விதமாக பேசிய காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவு முன்னாள் தலைவர் சாம் பிட்ரோடாவை கண்டித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் தஞ்சை தலைமை தபால் அலுவலகம் அருகே பா.ஜனதா கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 65 பேரை போலீசார் கைது செய்தனர்.

News May 12, 2024

தஞ்சாவூர்: சேர்க்கை விண்ணப்பம்

image

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் 2024 – 2025 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலை பட்டப்படிப்பு, முதுகலை அறிவியல், எம்.எஸ்.டபிள்யூ, எம்.எப்.ஏ, எம்.பி.ஏ, முதல்நிலை பட்டயம், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு <>-1<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

News May 11, 2024

தமிழ் பல்கலைக்கழகத்தில் சேர்க்கை விண்ணப்பம்

image

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் 2024 – 2025 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலை பட்டப்படிப்பு, முதுகலை அறிவியல், எம்.எஸ்.டபிள்யூ, எம்.எப்.ஏ, எம்.பி.ஏ, முதல்நிலை பட்டயம், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு <>-1<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

News May 11, 2024

மருத்துவ மாணவர்களிடம் விசாரணை

image

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவிகளுக்கு மயக்கவியல் துறை பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைத்தளத்தில் புகார் எழுந்தது. இதனையடுத்து விசாக கமிட்டி மற்றும் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் தலைமையில் நேற்று கல்லூரி மாணவ – மாணவிகளிடம் 8 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பிறகு சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

News May 11, 2024

 வெங்காயத்தின் விலை உயர்வு

image

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீங்கியதால் , தஞ்சாவூர் மாவட்டத்தில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் முதல் ரக பல்லாரி 50 கிலோ கொண்ட மூட்டை 1,200 விற்க்கப்பட்ட நிலையில் தற்போது 1,600 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம் 1,100 ரூபாய்க்கும் விற்பனையான நிலையில் தற்போது 1,500 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 1 கிலோ ரூ.40-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.60-க்கு விற்கிறது

News May 11, 2024

தஞ்சாவூர் ராஜராஜன் மணிமண்டபம் அம்சங்கள்!

image

தஞ்சாவூரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது ராஜராஜசோழன் மணிமண்டபம். தஞ்சாவூரின் புகழ்பெற்ற மன்னராக இருந்த ராஜராஜ சோழனின் 1000 ஆவது பிறந்தநாளின் நினைவாக 1984 இல் கட்டப்பட்ட ஒரு அருங்காட்சியகம் தரை தளத்தில் உள்ளது. இது தொன்மையான சிற்பங்களை வைத்திருக்கும் அருங்காட்சியகமாகவும் செயல்பட்டு வருகிறது. மேலும் இதில் ராஜராஜனின் சிலைகள், ஓவியங்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

News May 11, 2024

தஞ்சாவூரில் மழைக்கு வாய்ப்பு

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (மே.11) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நண்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. கோடையின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 10, 2024

தஞ்சாவூரில் மழைக்கு வாய்ப்பு

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (மே.10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 10, 2024

தஞ்சாவூர்: 407 பள்ளிகளில் 129 பள்ளி 100% தேர்ச்சி!

image

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் என மொத்தம் 258 பள்ளிகளில் 95 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இதேபோல் கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் என 149 பள்ளிகளில் 34 பள்ளிகள் 100% தேர்ச்சி விகிதம் அடைந்துள்ளன.

News May 10, 2024

தஞ்சாவூர் கலெக்டர் அழைப்பு

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் RTE இடஒதுக்கீடு அடிப்படையில் மெட்ரிகுலேஷன் – நர்சரி & ப்ரைமரி பள்ளிகள் மொத்தம் 284 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு 2,984 இடங்கள் உள்ளதாகவும், இதில் பெற்றோர்கள் rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் வருகிற 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதனையடுத்து தகுதிபெற்ற மற்றும் தகுதி பெறாத மாணவர்கள் விவரம் 27ம் தேதி வெளியிடப்படும் எனவும் கலெக்டர் தீபக் ஜேக்கப் அறிவித்துள்ளார்.