India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சை, ஆடுதுறையில் வழக்கறிஞர் ம.க.ராஜா நினைவு தினத்தை முன்னிட்டு இலவச இரத்த தானம் மற்றும் உயர்தர சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இம்முகாமில் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தாமாக முன்வந்து ரத்ததானம் வழங்கினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு சர்க்கரை, இரத்த அழுத்தம், இசிஜி உள்ளிட்ட உயர்தர மருத்துவ சேவைகளுடன் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
நெய்குன்னத்தை சேர்ந்த திமுக நிர்வாகி கலைவாணன் 12 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரது பெரியப்பா மகனான அருண்பாண்டியனை கைது செய்துள்ளனர். அருண்பாண்டியன் 25 லட்சம் ரூபாயை கலைவாணனிடம் கடனாக பெற்றுள்ளார். இதனை திருப்பி கேட்டதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அருண்பாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நீடாமங்கலத்தை சேர்ந்தவர் ஹரிகரன் பழக்கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 28ஆம் தேதி தஞ்சை, வல்லம் புறவழிச் சாலையில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தொழில் போட்டி காரணமாக நடைபெற்ற இந்தப் கொலையில் ஏற்கனவே ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது கூலிப்படையை சேர்ந்த அஜித், தென்னரசு ஆகிய இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கடலோரப் பகுதிகளில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு (மே.17- 20) பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் தஞ்சாவூரில்லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று(மே 17) காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவையாறு, ஒரத்தநாடு, தஞ்சாவூர் ஆகிய பகுதியிலுள்ள அரசு மற்றும் தனியார் தொழில் பயிற்சி மையங்களில் 2024 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வருகிற 07ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தொழிற் பயிற்சி நிலையங்கள், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகியவற்றில் மாணவர்கள் இலவசமாக விண்ணப்பித்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாபநாசம் அருகே ராஜகிரி மெயின் ரோட்டில் கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற சரக்கு லாரி அதிவேகமாக வந்து எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த ராஜகிரி நாயக்கர் தெருவை சேர்ந்த யுவராஜா 33 என்பவர் மீது மோதியது. இதில் யுவராஜா இடது காலில் பலத்த அடிப்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தஞ்சாவூர் கல்லணை கால்வாயில் அதிக அளவில் குப்பைகள் மற்றும் கழிவுகள் தேங்கி இருந்தன. இதனை மாநகராட்சி சார்பில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. சிவாஜி நகரில் இருந்து 20கண் பாலம் வரை சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் நடைப்பெற்ற பணியில் 690 ஊழியர்கள் ஈடுபட்டனர். 2 நாட்கள் நடைபெற்ற இந்த பணியில் பாட்டில்கள், துணிகள், தேங்காய் மட்டைகள் என 22 டன் குப்பைகள் கால்வாயில் இருந்து அகற்றப்பட்டன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (மே.15) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பட்டுக்கோட்டை பகுதியில் 16 செ.மீட்டரும், அதிராமபட்டினம், மதுக்கூர் ஆகிய பகுதிகளில் 11 செ.மீட்டரும் அதிராமபட்டினம் AWS-யில் 10 செ.மீட்டரும், பேராவூரணியில் 6 செ.மீட்டரும், திருவிடைமருதூரில் 5 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவாகியிருந்தது.
Sorry, no posts matched your criteria.