India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியை ரமணி கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்ததைத் தொடர்ந்து, உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இன்று ஆசிரியை உடலுக்கு நேரில் சென்று மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்நாடு முதல்வரின் ‘உங்களைத் தேடி உங்கள் ஊர்’ திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஒன்றியம், வீராகுறிச்சி ஊராட்சியில் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொதுவிநியோகத் திட்ட சேமிப்பு கிடங்கில் உணவு பொருட்கள் இருப்பு குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் உடன் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சை அருகே மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (நவ.20) மாணவர்கள் கண் எதிரே கொடூரமாக கத்தியால் குத்தி கொல்லப்பட்ட ஆசிரியை ரமணியின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். மேலும் இச்சம்பவத்தை ‘மிருகத்தனமானது’ என்று குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், குற்றவாளிக்கு உரிய தணடனை பெற்று தரப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
தஞ்சை அருகே மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (நவ.20) காலை ஆசிரியை ரமணி என்பவர் மாணவர்கள் கண்முன்னே கொடூரமாக கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். இதனையடுத்து அப்பள்ளியில் இன்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், அப்பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உரிய கவுன்சிலிங் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் ஆசிரியை ரமணியை குத்தி கொன்றவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ‘ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது, மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளி ஆசிரியை மீதான தாக்குதலை கண்டிக்கிறோம். ஆசிரியை ரமணியை இழந்து வாடும் குடும்பத்தினர் உள்ளிட்டோருக்கு இரங்கல்’ என அவர் தெரிவித்தார்.
தஞ்சை மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியை ரமணி என்பவரை இன்று வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருந்த போது, சின்னமனை கிராமத்தைச் சேர்ந்த மதன்குமார் என்பவர் கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோழபுரம் பகுதியை சேர்ந்த சுந்தரம் கடந்து 2016 ஆம் ஆண்டும் அவரது மகன் சுகுமார் கடந்த 2018 ஆம் ஆண்டும் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது காவல் ஆய்வாளராக இருந்த சரவணன் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் ஆஜர் ஆகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர் சரவணன் தற்போது நீலகிரியில் துணை போலீஸ் சூப்பிரண்டாக உள்ளார்.
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ட்ராமா ரெஜிஸ்ட்ரி அசிஸ்டன்ட்- 1 தேவை என்ற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இது தற்காலிக வேலை என்றும், நிரந்தர பணி அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. உரிய கல்வித்தகுதி உடையவர்கள் கல்விச்சான்றிதழ்களுடன் விண்ணப்பதாரர்கள் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தஞ்சாவூர் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். கடைசி நாள் 25 ஆம் தேதி.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரண்டு மற்றும் நான்கு சக்கர மோட்டார் வாகனங்களை பொது ஏலத்தில் விட, மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளனர். பொது ஏலமானது, 20ஆம் தேதி நாளை 10.00 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் கோர்ட் சாலை, பழைய ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது.
மத்திய, மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் மூன்று மாத காலம் தையல் பயிற்சி முடித்து உரிய சான்று பெற்றுள்ள முன்னாள் படைவீரர்களின் மனைவி, கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் அவர்களுக்கு இலவசமாக தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.