Thanjavur

News February 27, 2025

கும்பகோணம் அருகே விசிக கொடிக்கம்பம் உடைப்பு

image

கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்தில் வன்னியர் சங்கத்தின் சார்பில் அண்மையில் நடத்தப்பட்ட சோழ மண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாடு நடந்த இடத்திற்கு அருகில் வளையப்பேட்டை என்ற இடத்தில் வி.சி.க.கொடிக்கம்பம் பாமக தொண்டர்களால் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

News February 27, 2025

தஞ்சாவூர் பெரிய கோயிலில் மகா சிவராத்திரி விழா

image

மகா சிவராத்திரி விழாவையொட்டி, தஞ்சாவூர் பெரிய கோயிலில் புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை காலை வரை தொடர்ந்து சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதில், புதன்கிழமை இரவு 10 மணிக்கு முதல் கால பூஜையும், நள்ளிரவு 12.30 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், அதிகாலை 2 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், 4 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடைபெற்றன. இக்கோயிலுக்கு உள்ள பெத்தண்ணன் கலையரங்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

News February 27, 2025

கஞ்சா கடத்திய 3 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை

image

கஞ்சா கடத்த முயன்ற 3 பேருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் புதன்கிழமை 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வழியாக பைபர் படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்த போதைப் பொருள் தடுப்புக் காவல் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. 10 சாக்குகளில் 135 பொட்டலங்களில் 296.5 கிலோ கஞ்சா இருந்தது. முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கே. முருகானந்தம், மகேந்திரன் , சசிகுமார் கைது செய்தனர்.

News February 27, 2025

பூதலூரில் பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு

image

பூதலூர் அருகே அய்யனாபுரத்தில் நெல் மூட்டைகளை தைத்து கொண்டிருந்த தொழிலாளி மீது பைக் மோதி ஏற்பட்ட விபத்தில் அவர் உயிரிழந்தார். அய்யனாபுரம் சாலியத்தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீரங்க மகன் ஆறுமுகம் (60) இவர் கடந்த 14ஆம் தேதி மாலை அய்யனாபுரம் படுத்தாலும் அருகே சாலை ஓரத்தில் நெல் மூட்டைகளை தைத்து கொண்டிருந்தார். தஞ்சை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News February 26, 2025

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

image

தஞ்சாவூர் மாவட்டத்தின் நியாய விலை கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெறும்AAYமற்றும் PHHகுடும்ப அட்டையினர்28.02.2025க்குள் கைவிரல் ரேகை பதிவு (e-KYC) செய்யுமாறு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். AAYமற்றும்PHHபயனாளிகள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களது கைவிரல் ரேகையை சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடையில் பதிவு செய்ய வேண்டும்.

News February 26, 2025

வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே திறக்கப்படும் வாசல்

image

திருவிடைமருதூர் , தேப்பெருமாநல்லூர் ஸ்ரீ விஸ்வநாதர் சுவாமி கோயில். மறுபிறவி இல்லாதவர்களே இக்கோயிலில் தரிசனம் செய்ய முடியும் என்பது ஐதீகம். ஆண்டிற்கு இரு முறை சிவராத்திரி மற்றும் மாசி மகத்தில் மட்டும் திறக்கப்படும் சூரிய மண்டல வாசல் வழியாக விஸ்வநாதரை தரிசிக்கும் பக்தர்களுக்கு 21 தலைமுறை சாபம் நீங்கும், சிவராத்திரியான இன்று மாலை 4 மணி முதல் காலை 6 மணி வரை சூரிய மண்டலவாசல் திறந்திருக்கும்.

News February 26, 2025

சூா்யா நிதி நிறுவன மோசடி குறித்து புகாா் செய்யலாம்

image

தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் கும்பகோணம் சூா்யா நிதி நிறுவனம் மற்றும் சூா்யா சிட்ஸ் நிறுவனத்தின் மீது பதியப்பட்ட நிதி மோசடி வழக்கு தஞ்சாவூா் மாவட்ட குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, விசாரணையில் உள்ளது. எனவே கும்பகோணம் சூா்யா நிதி நிறுவன மோசடியால் பாதிக்கப்பட்ட நபா்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்டக் குற்றப் பிரிவில் பிப்.27ஆம் தேதி புகாா் செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News February 25, 2025

மர்மான முறையில் இறந்து கிடந்த வாலிபர்

image

வல்லம் பிரிவு சாலையில் உள்ள முதலை முத்து வாரி அருகே கார்‌ ஒன்று நீண்ட நேரமாக நின்று உள்ளது.அப்போது கார் நிற்பதை மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தை அடுத்து, HIGHWAY PATROL  போலீசார் விரைந்து வந்து காரை திறந்து பார்க்கையில் மர்மான முறையில் வாலிபர் இறந்து கிடந்தார்.இது குறித்து வல்லம்போலீசார் விரைந்து விசாரணை மேற்கொண்டதில் பட்டுக்கோட்டைசேர்ந்த அருண்குமார்என்பது தெரியவந்தது.

News February 25, 2025

SSLC தனித்தேர்வர்கள் கவனத்திற்கு..

image

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கும், செய்முறை தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு பிப்.25 முதல் பிப்.28ஆம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மாணவர்கள் அசல் செய்முறைப்பயிற்சி அத்தாட்சி சான்றிதழுடன் நாளை முதல் அறிவியல் பாட செய்முறைத் தேர்வை எழுதலாம். தேர்வர்கள் தவறாமல் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுடன் செய்முறை தேர்வை எழுத வர வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

News February 25, 2025

முன்னாள் எஸ்.ஐ.க்கு 3 ஆண்டுகள் சிறை

image

பள்ளியக்ரஹாரத்தைச் சோ்ந்த ரமேஷ்பாபு (41) என்பவர் லாரி மூலம் செங்கல், மணல் ஏற்றி விற்பனை செய்து வருகிறாா். மெலட்டூா் காவல் நிலைய உதவி ஆய்வாளராக இருந்த சுகுமாா் லாரியை பறிமுதல் செய்து ஆவணங்களை திருத்த  ரமேஷ்பாபுவிடம் ரூ. 3000 லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். இதில் சுகுமாருக்கு  மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 12 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்துள்ளார்.

error: Content is protected !!