Thanjavur

News July 25, 2024

குழந்தைகளை மற்றவருடன் ஒப்பீடு செய்யாதீர்

image

தஞ்சை அரண்மனை வளாகத்தில் நடைபெறும் புத்தக திருவிழாவில் முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு கலந்துகொண்டார். இந்நிகழ்வில் பேசிய அவர், குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்வதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். ஒப்பீடு என்பது ஆபத்தானது. மற்றவருடன் ஒப்பீடு செய்வதன் மூலம் போட்டி, பொறாமை, தற்கொலை செய்யும் எண்ணங்கள் ஏற்படும்” என அவர் தெரிவித்தார்.

News July 24, 2024

மேயரை மாற்ற சொல்லி பறக்கும் கடிதங்கள்?

image

கும்பகோணம் மாநகராட்சி மேயராக காங்கிரஸைச் சேர்ந்த சரவணன் பதவி வகித்து வருகிறார். இவர், மாமன்றக் கூட்டத்தை சரியாக நடத்துவதில்லை, தீர்மானத்திற்கு கையெடுத்து போடுவதில்லை என கவுன்சிலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், மேயரை மாற்றச் சொல்லி திமுக தலைமைக்கும், காங்கிரஸ் தலைமைக்கு கடிதங்கள் பறப்பதாக கூறப்படுகிறது.

News July 24, 2024

மக்களிடம் மனு பெற்ற கலெக்டர்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. இதில் மாற்று திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அறிஞர் அண்ணா சக்கரை ஆலை தலைமை நிர்வாகி இரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News July 24, 2024

புதுப் பொழிவு பெறும் கல்லணை

image

உலகப் புகழ்பெற்ற கல்லணை தண்ணீர் திறப்புக்கு தயாராகும் நிலையில் அணையின் அனைத்து பகுதிகளும் வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவு பெற்று வருகின்றது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்து செல்கின்றனர். அணையின் அனைத்து பகுதிகளும் வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்படுவதால் விவசாயிகளும் மகிழ்ச்சி கொண்டுள்ளனர்.

News July 24, 2024

தஞ்சை: 2,500 டன் புழுங்கல் அரிசி

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரவை ஆலை மற்றும் சேமிப்பு கிடங்கில் இருந்து 2,500 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம் தஞ்சை ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு சரக்கு இரயில் மூலம் 21 வேகன்களில் ஏற்றப்பட்டு தலா 1,250 டன் வீதம் தேனி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு பொது விநியோக திட்டத்தில் வழங்குவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

News July 24, 2024

மாவட்ட அளவிலான தபால் தலை கண்காட்சி

image

தஞ்சாவூர் கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் தங்கமணி வெளியிட்ட செய்தி குறிப்பில், “இந்திய தபால் துறை சார்பில் “களஞ்சியம்@79 இ” என்ற தலைப்பில் தமிழ் பல்கலை.யில் ஆக.8,9 ஆகிய தேதிகளில் மாவட்ட அளவிலான தபால் தலை கண்காட்சி நடைபெறவுள்ளது. இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட தபால் தலைகள் இடம் பெறவுள்ளன. தபால் தலை சேகரிப்பாளர்கள் கலந்து கொண்டு தபால்தலைகளை காட்சிப்படுத்தலாம்”  என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News July 24, 2024

தஞ்சாவூர்: உயர் பதவிகளை அலங்கரிக்கும் பெண்கள்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக ப்ரியங்கா பங்கஜம், நுகர்பொருள் வாணிபகழக முதுநிலை மண்டல மேலாளராக மோகனா, வ.கோட்டாட்சியர்கள் இலக்கியா, ஜெயஸ்ரீ, பூர்ணிமா, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, கூட்டுறவு சங்க பதிவாளர் தமிழ்நங்கை , உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் சித்ரா, வேளாண் இணை இயக்குநர் சுஜாதா ஆகியோர் உயர் பதவிகளை அலங்கரித்து வருகின்றனர்.

News July 23, 2024

தஞ்சை:விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 26 ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெறவுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, கூட்டுறவு, கால்நடை துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இதில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு பயன் அடைய ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

News July 23, 2024

வேளாண் அலுவலர்களுடன் தஞ்சை கலெக்டர் ஆலோசனை

image

தஞ்சை மாவட்டத்திற்கு புதிதாக மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள பிரியங்கா பங்கஜம், விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவித்ததை தொடர்ந்து நேற்று விவசாய அலுவலர்களை அழைத்து சிறப்பு கூட்டம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் விவசாயிகளுக்கு நம்மால் என்ன செய்ய முடியுமோ அந்த அளவு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

News July 23, 2024

அதிகளவு நீர்வரத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி

image

கல்லணையில் இன்று காலை நிலவரப்படி கொள்ளிடத்தில் மட்டும் 45 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாயில் தண்ணீர் திறக்கப்படவில்லை. அதேபோல் மேட்டூரில் 82 அடியாகவும், 43.978 தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு 79,682 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து 1002 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூருக்கு அதிகப்படியாக தண்ணீர் வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி கொண்டனர்.

error: Content is protected !!