India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பத்துகாடு விடுதியை சேர்ந்தவர் சின்னகுழந்தை (49). இவருக்கும் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அப்பெண்ணின் மருமகன் விஜயகுமார் தனது மாமியாரை கண்டித்துள்ளார். இந்நிலையில் நேற்று அப்பெண்ணை தேடி வந்த சின்னகுழந்தையை விஜயகுமார் கட்டையால் அடித்து கொலை செய்து உடலை செப்டிக் டேங்கில் மறைத்துள்ளார்.
தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி டெல்லியில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில், “தஞ்சையில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் ரயில் இயக்க வேண்டும். பட்டுக்கோட்டை பேராவூரணி வழியாக கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை வாரத்தின் 7 நாட்களும் இயக்க வேண்டும் திருச்சி – பாலக்காடு ரயிலை தஞ்சை வரை நீட்டிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
தஞ்சை வடக்கு மாவட்ட திமுக சார்பில், கும்பகோணம் காந்தி பூங்கா அருகில், தமிழ்நாட்டை வஞ்சித்த மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் அரசு தலைமை கொறடா கோவி.செழியன் மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
தமிழகத்தின் இன்று 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது அடுத்த இரவு 7 மணி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லணையில் இன்று காலை நிலவரப்படி கொள்ளிடத்தில் மட்டும் 45 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆகியவற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை. அது போல மேட்டூரில் 99.11 அடியாகவும், 63.693 தண்ணீர் இருப்பாவும் உள்ளது. அணைக்கு 93.828 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து 1004 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
கும்பகோணம் காவிரி ஆற்றில், நம்ம காவிரி தூய்மைக் குழு சார்பில் நேற்று தூய்மை பணிகள் நடைபெற்றது. இதனை சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் தொடங்கி வைத்தார். இதில், அரசு மற்றும் தனியார் கல்லூரியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் 15-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் என மொத்தம் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தூய்மைப் பணியினை மேற்கொண்டனர்.
ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமையான இன்று பூக்களின் விலை சற்று அதிகரித்துள்ளது. தஞ்சாவூர் பூ சந்தையில் மல்லிகை கிலோ 500 ரூபாய், ஆப்பிள் ரோஸ் 150 ரூபாய், பன்னீர் ரோஸ் 100 ரூபாய், சம்மங்கி 200 ரூபாய், கனகாம்பரம் 600 ரூபாய், முல்லை 500 ரூபாய், மரிக்கொழுந்து 80 ரூபாய், செண்டி பூ 100 ரூபாய், அரளி 120 ரூபாய், செவ்வந்தி 300 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.
திருச்சிற்றம்பலம் அருகே உள்ள சித்துக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (48). திமுக கிளை செயலாளரான இவரது வீட்டின் பால்கனியில் கடந்த 24ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு சென்றனர். போலீசார் நடத்திய விசாரணையில், ரவிக்குமார் (39), சிவனேசன் (22), அஜய்குமார் ஆகிய 3 பேர் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. பின்னர் 3 பேரையும் கைது செய்தனர்.
கல்லணையில் இன்றைய காலை நிலவரப்படி கொள்ளிடத்தில் மட்டும் 45 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆகியவற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை. மேட்டூரில் 89.31 அடியாகவும், 51.867 தண்ணீர் இருப்பாவும் உள்ளது. அணைக்கு 33,040 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து 1003 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால், டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 43 வயதான பெண் ஒருவர். தற்போது தஞ்சையில் வசித்து வரும் இவர் தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பங்குச்சந்தையில் லாபம் பெற நினைத்து முகநூலில் வந்த விளம்பரத்தை நம்பி ரூ.13.50 லட்சத்தை இழந்துள்ளார். இதுதொடர்பான புகார் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.