India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத ரேஷன் அட்டை தாரர்கள், இம்மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம். ஜூன் மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே, தஞ்சாவூரில் உள்ள 7,02,527 அட்டைதாரர்கள் ஜூலை மாதத்துக்கான பொருட்களை இம்மாதம் பெற்றுக் கொள்ளலாம்.
இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. கிணற்றில் குளித்தது, கிரிக்கெட் ஆடியது, பள்ளிக்கு செல்வதாக கூறி படத்துக்கு போவது என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நண்பர்களுடன் செய்த சேட்டைகளுன்டு. அந்த வகையில், நீங்க உங்க நண்பனை பற்றி கீழே கமெண்ட் பண்ணுங்க, நண்பனுக்கு சேர் செய்யுங்க.
தமிழ்நாடு அரசின் கும்பகோணம் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநராக பொன்முடி இன்று பணி ஏற்றுக்கொண்டார். தமிழ்நாடு அரசின் சேலம் கோட்டத்தில் நிர்வாக இயக்குநராக பணிபுரிந்த இவர் கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனராக பணி ஏற்றுக்கொண்டார் . இங்கு நிர்வாக இயக்குனராக இயக்குநராக இருந்த மகேந்திரகுமார் சென்னை கும்மிடிபூண்டி கூடுதல் இயக்குனராக சென்றார்.
தமிழ்நாட்டில் இன்று ஏழு இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையம் பகுதியில் 104.36 டிகிரி பாரன்ஹீட், தஞ்சையில் 102.2, நாகப்பட்டினத்தில் 101.48, பாளையங்கோட்டையில் 101.3, திருச்சியில் 100.94, கரூர் பரமத்தியில் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் இன்று கடலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து வெளியே செல்பவர்கள் எச்சரிக்கையோடு இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 14 துணை தாசில்தார்கள் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் வழங்கி, மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார். இதில், தஞ்சை முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஜெயமதி, ஆட்சியர் அலுவலக தலைமை உதவியாளராகவும், பட்டுக்கோட்டை முதல்நிலை வருவாய் ஆய்வாளர் ராஜலட்சுமி பதவி உயர்வு வழங்கப்பட்டு, பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலக துணை தாசில்தாராக நியமிக்கப்பட்டார்.
தஞ்சையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு, தேவையான பூ, பழங்களை வாங்க தஞ்சை மாவட்ட பகுதிகளில் உள்ள கடை வீதிகளில் மக்கள் குவிந்தனர். அதேபோல் மஞ்சள் கயிறு, குங்குமம் மற்றும் பொட்டுக்கடலை, சர்க்கரை, வெல்லம் ஆகிய பொருட்களையும் மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.தஞ்சை மாவட்டத்தில் உள்ள பூ மார்க்கெட்டுகளில் இன்று கனகாம்பரம் பூ விலை, ஒரு கிலோ ரூ.800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தருமை ஆதீனம் திருபுவனம் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் சுவாமி திருக்கோயில் ஆடி மாதம் 3வது வெள்ளி கிழமையன்று தருமை ஆதீனம் ஸ்ரீ லஜஸ்ரீ குருமகா சந்நிதானம் அவர்களின் திருவுல பாங்கின் வண்ணம் தர்மசம்வர்த்தினி அம்பாளுக்கு சிறப்பு சந்தன காப்பு அலங்காரம் திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.
இதில் கலந்து கொள்ள எவ்வித கட்டணமும் வசூல் செய்யப்படவில்லை, அனைவருக்கும் அனுமதி இலவசமாக்கப்பட்டது .
கும்பகோணம் துக்கம்பாளையம் தெருவில் வட மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு பாலிஷ் போடுவதாக கூறி வீட்டில் உள்ள பெண்களிடம் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை பெற்று அதனை பாலீஷ் போடும்போது அதனை கரைத்து ஏமாற்றி மோசடியில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பீகாரை சேர்ந்த பிபின் குமார் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தஞ்சை மாவட்டம் கல்லணை காவிரி பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. தண்ணீர் திருவையாறு வந்தடைந்ததுள்ளதால் ஆடி 18 மற்றும் ஆடி அமாவாசை இரண்டு நாட்களில் ஒரு லட்சத்திற்கு மேல் பொதுமக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா ஆய்வு செய்தார்.
Sorry, no posts matched your criteria.