Thanjavur

News June 1, 2024

வாக்கு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு

image

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் தொகுதியில் பதிவான வாக்கு இயந்திரங்கள் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கல்லூரி முழுவதும் மூன்றடுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் 24மணி நேரமும் சுழற்சி முறையில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு குறித்து பணி குறித்து கலெக்டர் தீபக்ஜேக்கப் ஆய்வு செய்தார்.

News May 31, 2024

தஞ்சையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

image

கோடை விடுமுறை முன்னிட்டு பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் சென்று விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். இதேபோல் சுற்றுலாத்தலமான தஞ்சையில் உள்ள பெரிய கோவில், சரஸ்வதி மஹால், அரண்மனை ஆகிய இடங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் பொதுமக்கள் குவிந்துள்ளனர். அரண்மனை, சரஸ்வதி மஹால் தர்பார்மண்டபம் ஆகிய இடங்களை தங்களது குழந்தைகளுடன் பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

News May 31, 2024

வடுக பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

image

தஞ்சை, திருவிடைமருதூர் அருகே உள்ள திருக்கோடிக்காவல் அருள்மிகு திருக்கோடீஸ்வரர் ஆலயத்தில் உள்ள வடுக பைரவருக்கு நேற்று (மே.30) தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பால், பன்னீர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஹோமம் வளர்க்கப்பட்டு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

News May 30, 2024

அக்னிவீர் தேர்விற்கு இளைஞர்களுக்கு அழைப்பு

image

அக்னிவீர் இசைகலைஞர்கள் தேர்விற்கு இந்திய இராணுவத்தால்
03.07.2024 முதல் 12.07.2024 வரை பெங்களூரில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இதற்கு ஜனவரி 2ஆம் தேதி 2004க்கு பின் 2007 ஜுலை 2க்கு முன் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். ஏதேனும் இசைக்கருவி வாசிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். தகுதியுடைய இளைஞர்கள் http://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும்படி ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவித்துள்ளார்

News May 30, 2024

தஞ்சாவூர்: தாய் இறந்த துக்கத்தில் இளம்பெண் தற்கொலை

image

தஞ்சாவூர், மேலவீதி தெலுங்குசெட்டி தெருவை சேர்ந்த சுகன்யா(36), தனியார் மருத்துவமனையில் உதவியாளராக வேலை செய்து வருகிறார். சுகன்யாவின் தாய் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை குறைவால் இறந்துவிட்டார். இதனால் சில நாட்களாகவே சுகன்யா மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று(மே 29) இரவு வேலை முடித்து வந்த சுகன்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

News May 29, 2024

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்தவர் தற்கொலை

image

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர் தினசீலன் (31). இவர் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் உள்ள தனியார் விடுதியில் விடுதி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை தூங்க செல்வதாக கூறிவிட்டு சென்றவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காவல்துறை விசாரணையில் ஆன்லைன் ரம்மியில் 5 லட்சத்திற்கு மேல் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.

News May 29, 2024

தஞ்சாவூர் பூண்டி மாதா தேவாலயம் சிறப்பு!

image

தஞ்சாவூரில் பூண்டி மாதா பேராலயம் , திருக்காட்டுப்பள்ளிக்கு அருகே பூண்டி என்னும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வாலயம் கொள்ளிடம் ஆற்றிற்கும், காவிரி ஆற்றிற்கும் நடுவில் அமைந்துள்ளது. 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய கிறிஸ்தவ போதகரான வீரமாமுனிவரின் முயற்சியால் கட்டப்பட்டது. பூண்டி மாதா கோவில் வளாகத்தில் அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளது. இதனுடன் பூங்கா நடுவே கன்னி மரியாளின் சிலையும் அமைந்துள்ளது.

News May 28, 2024

தேர்வர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி முகாம்

image

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் – 1 தேர்வு வருகிற 13.07.2024 அன்று நடைபெறுகிறது. இதற்கு தயாராகும் தேர்வர்கள் பயன்பெறும் வகையில், தஞ்சாவூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் கட்டணமில்லா பயிற்சி முகாம் நடைபெறுகிறது‌. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. முன்பதிவு செய்து தேர்வர்கள் பயன்பெற ஆட்சியர் அறிவுறுத்தல்

News May 28, 2024

தஞ்சாவூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

தன்னலமற்ற துணிச்சலான செயல்களில் ஈடுபடுதல் மற்றும் விளையாட்டு, சமூக சேவை ஆகிய துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்திய 5 முதல் 18 வயதுடைய குழந்தைகளை பாராட்டி கெளரவிக்கும் விதமாக மத்திய அரசால் ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. இந்தாண்டுக்கான இவ்விருதினை பெற தகுதியுடைய குழந்தைகள் http://awards.gov.in என்ற இணையதளத்தில் வரும் ஜூலை 31க்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் தீபக் ஜேக்கப் வேண்டுகோள்.

News May 28, 2024

வாக்கும் எண்ணும் மையத்தில் ஆய்வு 

image

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வருகிற ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில் தஞ்சை மக்களவை தொகுதிக்கான வாக்கு இயந்திரங்கள் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்கு என்னும் மையத்தை கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார். 

error: Content is protected !!