Thanjavur

News June 10, 2024

தஞ்சாவூரில் மக்கள் குறை தீர்க்கும் நாள்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளாக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செயற்கை அவையங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தீபக்ஜேக்கப் இன்று(ஜூன் 10)வழங்கினார். இதில்     மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், உதவி ஆட்சியர் பயிற்சி உத்கர்ஷ் குமார் மற்றும் பலர் இருந்தனர்.

News June 10, 2024

அஞ்சலக எனக்கு எண் முகாமை துவங்கி வைத்த ஆட்சியர்

image

தஞ்சாவூர் மாநகராட்சி பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு அஞ்சலக வங்கி கணக்கு எண் தொடங்கும் முகாமை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் இன்று(ஜூன் 10)துவக்கி வைத்தார். இதில் மேசன் ராமநாதன், உதவி ஆட்சியர்(பயிற்சி) உத்கர்ஷ் குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணை மேயர் அஞ்சுகம் பூபதி, முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் மற்றும் பலர் இருந்தனர்.

News June 10, 2024

கோமாரி நோய் தடுப்பு ஊசி சிறப்பு முகாமினை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

image

கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை திருமலை சமுத்திரத்தில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தொடங்கி வைத்தனர். ஜூன் 10ஆம் தேதி முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை மூன்று வாரங்களுக்கு நடைபெறும் இந்த முகாமினை விவசாயிகள் பயன்படுத்தி கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி நோயில் இருந்து தற்காத்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

News June 9, 2024

திமுக பிரமுகர்கள் வெட்டி கொலை

image

திருவாரூரை சேர்ந்தவர் பாபு(திமுக பிரமுகர்). இவர் தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று தனது மகனுடன் காரில் வந்துள்ளார். தஞ்சாவூர் – நாகை தேசிய நெடுஞ்சாலையில் காரை வழிமறித்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக மகன் கண்முன்னே வெட்டி கொலை செய்தனர். உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News June 9, 2024

வரத்து அதிகரிப்பால் தர்பூசணி விலை குறைவு

image

கோடைகாலத்தில் உடலில் ஏற்படும் நீர் இழப்புகளை தடுப்பதில் பெரும் பங்கு வகிப்பது தர்பூசணி. இதனால் கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தை ஈடு செய்வதற்காக அதிக அளவில் மக்கள் வாங்கி சென்றனர். கடந்த காலங்களில் 1 கிலோ தர்பூசணி பழம் ரூ.40-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்து 1 கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

News June 9, 2024

கல்லணையில் குடி நீருக்காக தண்ணீர் திறப்பு.

image

மேட்டூர் அணையில் 44.17 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு 656 கனஅடி தண்ணீர் வரத்தும், குடிநீருக்காக 2,103 தண்ணீர் திறப்பும் உள்ளது. இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் இருந்து காவேரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், ஆகிய ஆறுகளில் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு இல்லை. மேலும் குடிநீர் தேவைக்காக கொள்ளிடம் ஆற்றில் மணற்போக்கி வழியாக வினாடிக்கு 1,440 கன அடி தண்ணீர் வீதம் திறக்கப்படுகிறது.

News June 8, 2024

கல்லணையில் 10.4 மி.மீட்டர் மழை பொழிவு

image

தஞ்சை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி, கல்லணையில் 10.4 மி.மீ, திருக்காட்டுப் பள்ளியில் 6.2 மி.மீ, திருவையாறில் 3 மி.மீ, தஞ்சாவூரில் 2மி.மீ, பாபநாசத்தில் 9 மி.மீ, கும்பகோணத்தில் 2.4 மி.மீ, பூதலூரில் 9.6 மி.மீ, வல்லத்தில் 12 மி.மீட்டரும், குருங்குளத்தில் 2 மி.மீட்டரும் இன்று காலை வரை மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News June 7, 2024

திருவையாறில் அதிகபட்ச மழை பதிவு!

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தஞ்சாவூர் 19 மி.மீ, வல்லம் 20 மி.மீ, குருங்குளம் 16.30 மி.மீ, திருக்காட்டுப்பள்ளி 40 மி.மீ, பாபநாசம் 25 மி.மீ, கும்பகோணம் 13.20 மிமீ, நெய்வாசலில் 11.80 மி.மீ மழை பதிவானது. அதிகபட்சமாக திருவையாறில் 45 மி.மீட்டர் பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 288.30 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

News June 6, 2024

வேலையில்லா இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

image

தமிழகத்தின் துணிநூல் துறையில் புதிய வேலைவாய்ப்பினை உருவாக்குவதற்காக 10 மற்றும் +2 படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் பயிற்சி அளிக்க உள்ளது. இப்பயிற்சியினை பெற விரும்புவர்கள் <>https://tntextiles.tn.gov.in./jobs/<<>> என்ற வலைதளத்தில் பதிவு செய்யுமாறு ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவுறுத்தியுள்ளார்.

News June 6, 2024

மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள வைரல் போஸ்டர்

image

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. இதையடுத்து, அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என சசிகலா, ஓபிஎஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதற்கு அதிமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தஞ்சையை சேர்ந்த நிர்வாகி ஒருவர் சின்னம் மட்டுமே இருந்தால் வெற்றி பெற முடியாது – சின்னம்மா இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என போஸ்டர் ஒட்டியுள்ளது வைரல் ஆகியுள்ளது

error: Content is protected !!