Thanjavur

News February 26, 2026

தஞ்சை: +2 மாணவர்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மாசி மக திருவிழாவை முன்னிட்டு மார்ச் 2ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து +2 எழுத்துத் தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்க உள்ள நிலையில் தேர்வு நடைபெறுமா என மாணவர்கள் குழப்பத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் உள்ளூர் விடுமுறை அன்று +2 தேர்வு அறிவித்தப்படி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News February 26, 2026

தஞ்சை: CM CELL மூலம் ரூ.5000 பெறலாம் – APPLY..!

image

தஞ்சை மக்களே, உங்களுக்கு ? மகளிர் உரிமை தொகை ரூ.5000 வரலையா? CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. <>இங்கு க்ளிக் <<>>செய்து submit an appeal for KMUT என்பதை தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண், வங்கி கணக்கு எண் பதிவிட்டு விண்ணப்பியுங்க.. உங்கள் மனு குறித்து விரைவாக பரீசிலனை செய்யபட்டு ரூ.5000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த நல்ல தகவலை அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!

News February 26, 2026

தஞ்சை: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

image

தஞ்சை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <>parivahansewas.com<<>> என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். SHARE பண்ணுங்க!

News February 26, 2026

BREAKING: தஞ்சை மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு

image

தஞ்சை மாவட்டத்திற்கு வருகிற மார்ச் 2ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாசி மக திருவிழாவை முன்னிட்டு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக மார்ச் 14ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க!

News February 26, 2026

தஞ்சை: தாலுகா அலுவலகத்தில் லஞ்சம் கேட்டால் இத செய்ங்க!

image

நில அளவை, பட்டா மாற்றம், வரி வசூல், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற நாம் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய தேவை உள்ளது. இந்நிலையில் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் யாராவது தங்கள் பணியை சரியாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால், தஞ்சை மாவட்ட மக்கள் 04362-227100 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க

News February 26, 2026

தஞ்சை: இனி CM Cell-ல் புகார் அளிப்பது ஈசி!

image

தஞ்சை மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். இங்கே <>க்ளிக் செய்து<<>>, உங்களது புகார்களை பதிவு செய்யுங்கள். அல்லது 1100 என்ற எண்ணுக்கு அழையுங்கள். முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதால், உங்கள் கோரிக்கைக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க…

News February 26, 2026

தஞ்சை: வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது

image

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் கடந்த 21ஆம் தேதி சாலையில் நடந்து சென்ற ரகுமான் என்பவரிடம் 15 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்ததாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் வழிப்பறி செய்த தொகை ஹவாலா பணம் என்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சென்னையை சேர்ந்த மணிகண்டன், பொன் சுரேஷ், தினேஷ் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

News February 26, 2026

தஞ்சை: வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது

image

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் கடந்த 21ஆம் தேதி சாலையில் நடந்து சென்ற ரகுமான் என்பவரிடம் 15 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்ததாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் வழிப்பறி செய்த தொகை ஹவாலா பணம் என்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சென்னையை சேர்ந்த மணிகண்டன், பொன் சுரேஷ், தினேஷ் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

News February 26, 2026

தஞ்சை மாவட்டத்தில் 3 நாட்களுக்கு இதற்கு தடை!

image

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பிரதமர் மோடி வருகை தரவுள்ளதை அடுத்து வருகிற 28-ம் தேதி முதல் மார்ச் 2-ம் தேதி வரை தஞ்சை மாவட்டத்தில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.‌ தடையை மீறி ட்ரோன்கள் பறக்கவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் எச்சரித்துள்ளார்.

News February 26, 2026

தஞ்சை: பெண் ஒருவருக்கு 6 ஆண்டுகள் சிறை!

image

கும்பகோணத்தை சேர்ந்த வீராசாமி என்பவரது வீட்டில் கடந்த 2021ம் ஆண்டு 36 பவுன் நகைகள் கொள்ளை போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த தாமரைசெல்வி என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தாமரைசெல்விக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!