Thanjavur

News August 18, 2024

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு லேசான மழை

image

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டத்திற்கு லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகபட்சமாக பேராவூரணியில் 6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News August 18, 2024

பேராவூரணியில் 6 மில்லி மீட்டர் மழை

image

தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை வரை பேராவூரணியில் அதிகபட்சமாக 6 மில்லி மீட்டர் மழைக் பதிவாகி உள்ளது. மேலும், கும்பகோணத்தில் 2 மில்லி மீட்டரும், வெட்டிக்காடு பகுதியில் 2.8 மில்லி மீட்டரும், அயன்குடியில் 4.6 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News August 18, 2024

தஞ்சையில் கூட்டு வன்கொடுமை: பெண் எஸ்.ஐ. மாற்றம்

image

தஞ்சை மாவட்டத்தில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதனையடுத்து பாப்பாநாடு காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது, அவரை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க பெண் போலீஸ் எஸ்.ஐ கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு உடனடி சட்ட உதவி வழங்காமல் அலைக்கழிக்க செய்ததாக குற்றசாட்டு எழுந்தது. இந்நிலையில் பாப்பாநாடு பெண் எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றி தஞ்சை எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.

News August 17, 2024

தஞ்சாவூர் அரண்மனையில் ஆட்சியர் ஆய்வு

image

தஞ்சாவூர் அரண்மனை வளாக கலைக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் இன்று (17.08.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தஞ்சாவூர் அரண்மனை வளாக தர்பார் கூடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் கேட்டு அறிந்தார். நிகழ்ச்சியில் மாநகர செயற்பொறியாளர் சோமகணி உதவி பொறியாளர் மணிகண்டன் தினேஷ், தனசேகர் உள்பட பலர் உடன் உள்ளனர்.

News August 17, 2024

அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு மாவட்ட செயலாளர் நியமனம்

image

அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு கழக ரீதியாக செயல்பட்டு வந்த தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், நிர்வாக காரணங்களுக்காக தஞ்சாவூர் மேற்கு, கிழக்கு மாவட்டம் என இரண்டு மாவட்டங்களாக இன்று முதல் செயல்படும் என ஒருங்கிணைப்பார் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இதனை அடுத்து தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழக செயலாளர் என்.ஆர்.வி.எஸ். செந்தில் நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

News August 17, 2024

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

image

தஞ்சை மாவட்ட இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில், சிகிச்சைக்கு சென்ற இளம் பெண்ணுக்கு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்ததாக இளம்பெண் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதுகுறித்து ஒரத்தநாடு நீதிமன்றம் மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

News August 17, 2024

தஞ்சை மாணவன் தற்கொலை அதிர்ச்சியளிக்கிறது

image

தஞ்சை மாவட்டதை சேர்ந்த மாணவர் தனுஷ், கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற முடியாததால் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலும் நீட் ரத்து விவகாரத்தில் மாணவர்களை திமுக அரசு ஏமாற்றி வருவதாகவும், இனியாவது நீட் ரத்து குறித்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு முதல்வரை வலியுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

News August 17, 2024

கண்ணாடி பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பம்

image

தஞ்சை தலையாட்டி பொம்மை, ஓவியம், கலைத்தட்டு, வீணை, நெட்டி வேலைப்பாடு, ஐம்பொன் சிலைகள், குத்துவிளக்கு, திருபுவனம் பட்டு, நாதஸ்வரம் உள்ளிட்ட கைவினை பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. இந்த வகையில் தஞ்சை கைவினைத் தொழிலாளர்கள் கூட்டுறவு குடிசைத்தொழில் சங்கம் சார்பில், கண்ணாடி வேலைப்பாடுகளுடன் கூடிய பொருளுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

News August 16, 2024

தஞ்சையில் குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

image

ஒரத்தநாடு அடுத்த திருமங்கலக்கோட்டை முக்கரை பகுதியை சேர்ந்த தேவேந்திரன் என்பவரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ்ராவத் பரிந்துரையின் பேரில், குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் தடுப்பு காவலில் அடைக்க தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார்.

News August 16, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டு துறை வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து நடத்தும் சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் உதவி ஆட்சியர், வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!