India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக அரசு கலை பண்பாட்டு துறை சார்பில் தஞ்சை மாவட்டத்தில் பகுதிநேர கிராமிய கலை பயிற்சி வகுப்புகளுக்கு 2024 – 2025ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் கரகாட்டம், பொய்க்கால்குதிரை, நையாண்டி மேளம், நாதஸ்வரம் ஆகிய கலைகளுக்கு பயிற்சி வகுப்புகள் மண்டல கலை பண்பாட்டு மையத்தில் வாரத்தில் 2 நாட்கள் வகுப்புகள் நடைபெறும் என்று ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் நேற்று தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகபிற்படுத்தப்பட்டோர் , சிறுபான்மையினர் முன்னேற்றும் விதமாக நவீன சலவையகம் அமைப்பதற்கு நிதி உதவி செய்கிறது. நவீன சலவையகம் அமைப்பதற்கு இயந்திரங்கள்,மூலப்பொருட்கள் உள்ளிட்டவைகளுக்கு 3 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் இன்று தெரிவித்துள்ளார்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணிவரை இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
அய்யம்பேட்டை சேர்ந்த ஹக்கீம் என்பவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி அதில் முதலீடு செய்தால் பங்குத்தொகை தருவதாக விளம்பரம் செய்துள்ளார். இதனை நம்பி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் 1 லட்சம் முதல் 15 லட்சம் வரை முதலீடு செய்தனர். ஆனால் கூறியது போல அவர்களுக்கு பங்குத்தொகை வழங்காததால், பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் தலைமறைவாக இருந்த ஹக்கீமை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.
மானோஜிப்பட்டியை சேர்ந்த உமா தனது வீட்டிலேயே உணவகம் நடத்தி வருகிறார். இவர் சகோதரர் சிவக்குமார் உணவகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். உமா தனது தம்பியை அதிகமாக வேலை வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனஅழுத்தமடைந்த அவர் உணவகத்தில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அக்காவின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த உமா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.
தஞ்சை உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தஞ்சை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் குதிரைகட்டி தெரு, செல்லியம்மன் கோவில் தெரு, வேலூர் தெரு, சருக்கை தெரு, சுந்தரம் பிள்ளை தெரு, பரத் நகர், வாணிய தெரு, ராஜாராம் மடதெரு ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி தஞ்சாவூரில் 7 மி.மீ, திருவையாறு 39 மி.மீ, பூதலூர் 36.80 மி.மீ, ஒரத்தநாடு 13.10 மி.மீ, வெட்டிக்காடு 26.80 மி.மீ, அய்யம்பேட்டை 22 மி.மீ, திருவிடைமருதூர் 29.40 மி.மீ, பட்டுக்கோட்டை 2 மி.மீ, அதிராம்பட்டினம் 7.10 மி.மீ, மதுக்கூர் 1.40 மிமீ, கும்பகோணம் 4 மி.மீ, பாபநாசம் 2 மி.மீ என மாவட்டம் முழுவதும் சராசரியாக 260.60 மிமீ மழை பதிவாகியுள்ளது.
தஞ்சை மேரீஸ்கார்னர் பகுதியில் நேற்று அரசு பேருந்து செல்லும் போது மர்ம நபர்கள் பேருந்தை வழிமறித்து ஓட்டுநர் காளிதாஸ் மற்றும் நடத்துனர் தினசீலன் ஆகியோரை கடுமையாக தாக்கிவிட்டு பேருந்தின் கண்ணாடியையும் உடைத்து விட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட சாரதி, முருகன், விஜய் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. அதன்படி தமிழத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் (ஆகஸ்ட்.5) காலை 10 மணி வரை கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்ட்டில் பதிவிடவும்.
பாபநாசம் அருகே சோளகநத்தம் பகுதியை சேர்ந்தவர் பிச்சைமணி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வயநாட்டிற்கு கூலி வேலைக்கு சென்றுள்ளார். நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்பு குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசியுள்ளார். கடந்த 4 நாட்களாக அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அவரின் நிலை என்னவென்று தெரியவில்லை. மேலும் அவரை பற்றி அரசு தகவல் தெரிவிக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஷேர் செய்யவும்
Sorry, no posts matched your criteria.