Tenkasi

News December 27, 2024

வேளாண் கருவிகள் மானியத்தில் பெற அழைப்பு

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று(டிச.27) செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில்,“தென்காசி மாவட்ட விவசாயிகளுக்கு பம்பு செட்டுகளை வீடுகளில் இருந்தபடியே இயக்கும் கருவி, வேளாண் இயந்திர மயமாக்கல் உப இயக்கம் என்ற திட்டத்தின் கீழ் மானியத்தில் வழங்கப்படுகிறது; தேவைப்படுபவர்கள் 7904025547 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

News December 27, 2024

பழைய குற்றாலத்தில் சீரமைப்பு பணிகள் தாமதம்

image

தென்காசி மாவட்டம் பழைய குற்றால அருவியில், வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட சேதங்கள் 16 நாள் கடந்தும் இதுவரை சரி செய்யப்படாமல் இருப்பதால் அப்பகுதியில் குளிக்க இன்னும் தடை தொடர்கிறது. இவற்றை வனத்துறை சரி செய்வதா, பொதுத்துறை சரி செய்வதா என்ற குழப்பம் காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வியாபாரிகள், விவசாயிகள், சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

News December 27, 2024

கடையத்தில் மாரத்தான் மற்றும் கபடி போட்டி!

image

தென்காசி மாவட்டம் கடையம் யூத் பெடரேஷன் சார்பில் கடையம் யூனிட்டுக்கு உட்பட்ட வீரர்களுக்கான மாரத்தான் போட்டி நாளை(டிச.28) நடைபெற இருப்பதாகவும், நாளை மறுநாள்(டிச.29) ஒரு நாள் கபடி போட்டி சத்திரம் பாரதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியை நாளை காலை 6:00 மணிக்கு தூய இம்மானுவேல்(கடையம்) ஆலயத்திலிருந்து தென்காசி SP தொடங்கி வைக்கிறார்.

News December 27, 2024

தென்காசி மாணவர்களே! போட்டிக்கு ரெடியா

image

முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான மிதிவண்டி போட்டிகள் ஜனவரி 4ம் தேதி குத்துகள் வலசையில் நடைபெற உள்ளது. கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 86080 61125 என்று எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று(டிச.27) கேட்டுக்கொண்டார்.

News December 27, 2024

தென்காசியில் பாஜக ஆர்ப்பாட்டம் ரத்து

image

தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் முன்பு இன்று(டிச.27) மாலை 4 மணிக்கு பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக பாஜக தரப்பில் தெரிவித்து இருந்த நிலையில், நேற்று இரவு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக மாநில தலைவர் அறிவித்தார். இதை தொடர்ந்து தென்காசியில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

News December 27, 2024

மன்மோகன் சிங் மறைவுக்கு MLA பழனி நாடார் இரங்கல்!

image

இந்தியாவின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய டாக்டர் மன்மோகன் சிங் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன என தென்காசி மாவட்ட MLA பழனி நாடார் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

News December 27, 2024

மன்மோகன் சிங் மறைவிற்கு சிவ பத்மநாபன் இரங்கல்!

image

அனைவருக்குமான ஒன்றுபட்ட, ஜனநாயக, மதச்சார்பற்ற, பொருளாதார வளமுள்ள நாடாக இந்தியாவை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியவர் மன்மோகன் சிங். அவரது இழப்பு இந்திய நாட்டிற்கு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் இயக்கத் தொண்டர்களுக்கும், தென்காசி திமுக முன்னாள் தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாபன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

News December 27, 2024

தென்காசி மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தென்காசி மாவட்டத்தில் காவல் மற்றும் நெடுஞ்சாலை துறை ரோந்து பணியில் இன்று (டிச.26) இரவு 10 மணி முதல் (டிச.27) காலை 6 மணி வரை பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரம் மாநகர காவல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100 – ஐ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 26, 2024

தென்காசி மாவட்டத்தில் உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம் 

image

தென்காசி மாவட்ட காவல் துறையில் 8 உதவி ஆய்வாளர்களை தென்காசி மாவட்ட எஸ்.பி சீனிவாசன் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அச்சன்புதூர், குற்றாலம், சுரண்டை, ஆலங்குளம், அய்யாபுரம், சங்கரன்கோவில் டவுன், சங்கரன்கோவில் தாலுகா ஆகிய பகுதிகளில் பணியாற்றிய உதவி ஆய்வாளர்கள் ஜோசப், தர்மராஜ், அலெக்ஸ் மேனன், மாடசாமி முத்து, திலகர், மாரியப்பன், கார்த்திக், கணபதி செல்வம் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News December 26, 2024

தென்காசியில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

image

தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடந்து வரும் குற்றச்செயல்களை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (டிச.26) அறிவிப்பு விடுத்துள்ளார். அந்த வகையில் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாளை(டிச.27) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

error: Content is protected !!