India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் புதிய மினி பேருந்து திட்டம்-2024 ன் கீழ் தென்காசி மாவட்டத்தில் 53 சிற்றுந்துகள் (மினி பஸ்) இயக்க மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் அதற்கான ஆணைகளை இன்று வழங்கினார். இதையடுத்து தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும், கிராமங்களில் மீண்டும் மினி பஸ்கள் இயக்கப்பட இருக்கிறது. *இந்த நற்செய்தியை அனைவருக்கும் பகிருங்கள்*
தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று(மார்ச் 21) கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், குமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் மட்டும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வரும் 25ஆம் தேதி சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல். SHARE IT.
தென்காசி மாவட்டத்தில் அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையின் காரணமாக ஆழ்வார்குறிச்சி அருகே கடனா அணை பகுதியில் 3 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அணையின் நீர்மட்டம் 61.30 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9 கன அடியாகவும், அணையிலிருந்து வினாடிக்கு 29 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் சிவகிரி சந்தைப்பேட்டை தெருவை சேர்ந்தவர் சக்தி ராகவேந்திரன்(44). சென்னை கிளாம்பாக்கம் ஜி3 காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த ராகவேந்திரன், கடந்த 18ஆம் தேதி இரவு இயற்கை மரணம் அடைந்தார். தொடர்ந்து, நேற்று(மார்ச் 20) அவரது உடல் சிவகிரிக்கு கொண்டுவரப்பட்டு, 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று மார்ச் 20 இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில், ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர்,நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.நெல்லை கோட்டத்தில் 362 ஓட்டுநர், நடத்துநர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம். இங்கு கிளிக் செய்து மார்ச்.21-ஏப்ரல்.21 வரை விண்ணப்பிக்கலாம். *ஷேர் பண்ணுங்க*
தென்காசி மாவட்டம் முழுவதும் பரவலாக விட்டுவிட்டு கோடை மழை பெய்கிறது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் அடுத்த நான்கு தினங்களுக்கு கோடை மழை தொடர வாய்ப்பு உள்ளதாக தென்காசி வெதர்மேன் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளார். பெரும்பாலான இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கோடை மழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக குண்டாறு அணை பகுதியில் 26.20 மில்லி மீட்டர் மழையும், அடவி நைனார் அணை பகுதியில் 11 மில்லி மீட்டர் மழையும், கருப்பாநதி அணைப் பகுதியில் 8.50 மில்லி மீட்டர், ராமநதிப் பகுதியில் 8 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குற்றாலம் பகுதியில் இருந்து இன்று(மார்ச் 20) செங்கோட்டை நோக்கி சென்ற கனிமவள லாரி தாறுமாறாக ஓடி, வல்லம் ஊராட்சி சிலுவை மூக்கு அருகே சென்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்பட்டது. அப்பகுதியில் பேருந்துக்கு காத்திருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியதாக பெருமூச்சு விட்டனர். கனிம வளங்கள் கொண்டு செல்லும் கனரக லாரிகளின் போக்குவரத்தால் தொடர்ந்து தென்காசி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களின் புகார்களை விரைந்து விசாரணை செய்திட சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது
Sorry, no posts matched your criteria.