India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சுரண்டை அருகே உள்ள வெள்ளகாலில் இன்று மலைப்பாம்பு உயிருடன் பார்த்த பொதுமக்கள் சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சுரண்டை தீயணைப்பு அலுவலர் ரமேஷ் தலைமையில் நிலைய அலுவலர்கள் பாலசந்தர், ரவீந்திரன், சாமி, திலகர், நாண்முகராஜன் எட்வின் பொன்ராஜ் ஆகியோர் விரைந்து சென்று மலைப்பாம்பை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பொதுமக்கள் தீயணைப்பு துறையினரை பாராட்டினர்.
தென்காசி் காசி விஸ்வநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம் ஏப்ரல்.7ம் தேதி நடைபெற உள்ளது. இங்கு வருகை தரும் பக்தர்களுக்கு சிவ பக்தர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இதற்காக தென்காசி தெப்பக்குளம் பகுதியில் தற்காலிக உணவு அருந்தும் கூடம் அமைக்கப்பட்டு வருகிறது. 50 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகசிவ பக்தர் வைரமுத்து இன்று தெரிவித்தார். *ஷேர்
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரன் நாராயணர் கோவிலில் ஆண்டு தோறும் மார்ச், செப். மாதங்களில் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை மூன்று நாட்கள் அதிகாலையில் சூரிய உதயத்தின் போது சூரிய ஒளி மூலவர் மீது விழும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். அதேபோன்று மூலவர் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு நடைபெற்றது. இதனை காண ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். *ஷேர்
தென்காசி மாவட்டத்திற்கு தினந்தோறும் காவல் துறை கண்காணிப்பாளர் அதிகாரிகள் சார்பில் இன்று (22.03.25)இரவு நேர ரோந்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளன மேலும் உங்களது தேவையான உதவிகள் மற்றும் குறைகளை மேற்கண்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் அல்லது 98840 42100 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரத்தில் அபய ஹஸ்த ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தனி சன்னதியில் 6அடி உயர திருமேனியுடன் அபய ஹஸ்த ஆஞ்சநேயர் மிக கம்பீரமாக எழுந்தருளி இருக்கிறார். திருப்பாதங்கள் பக்தர்களை நோக்கி ஆசி வழங்குவது போல் உள்ளது. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்குள்ள குளத்தின் படியில் படிப்பாயாசம் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம். *மற்றவர்களுக்கு பகிருங்கள்*
இன்று மார்ச் 22 காலை 7 மணி நிலவரப்படி தென்காசி மாவட்டம் கடனா அணை நீர் இருப்பு 61 அடியாக உள்ளது. அணைக்கு 9 கன அடி நீர் வருகிறது. ராமநதி அணை நீர் இருப்பு 51 அடியாக உள்ளது. 10 கன அடி வெளியேற்றப்படுகிறது. கருப்பாநதி அணை நீர் இருப்பு 27 அடி. குண்டாறு அணை நீர் இருப்பு 26 அடி. அடவி நைனார் அணை நீர் இருப்பு 38 அடி .இந்த அணைக்கு 27 கன அடி நீர் வருகிறது, 25 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
புளியங்குடியைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி. ‘முன்னோடி இயற்கை விவசாயி’யான இவர், கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். மறுதாம்பு கரும்பு சாகுபடி, எலுமிச்சை, மரப்பயிர்கள் சாகுபடியில் சிறந்து விளங்குகிறார். இவரின் இயற்கை விவசாயப் பணிகளைப் பாராட்டி சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் நேற்று(மார்ச் 22) ‘வேளாண் வேந்தர்’ விருது அளித்துள்ளது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டீ கடை மாஸ்டர் கைது செய்யப்பட்டார். சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முகமது இஸ்மாயில் (44) என்பவரை நேற்று (மார்ச்.21) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சங்கரன்கோவில் காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல்துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம்,அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-9884042100 ஐ தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுளள்ளது.
முருகப்பெருமான் அவதரித்த விசாக நட்சத்திரக்காரர்கள் கோவிலாக தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலை முத்துக்குமரசுவாமி கோவில் உள்ளது.விசாக நட்சத்திரம் விமலசாகம், விபவசாகம், விபுலசாகம் என்ற மூவகை ஒளிக்கிரகணங்களைக் கொண்டது. இந்த கிரகணங்கள் அனைத்தும் இம்மலையில் படுவதால், விசாக நட்சத்திரத்தினர் இங்கு சென்று வழிபட்டு வந்தால் வாழ்வில் திருப்பம் ஏற்படும். *மற்றவர்களுக்கு பகிருங்கள்*
Sorry, no posts matched your criteria.