India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக கேரளா எல்லையான ஆரியங்காவு கடமான் பாறை வனப்பகுதியில் சந்தன மரங்களை வெட்டி கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலின் பேரில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புளியரை கற்குடியை சேர்ந்த மணிகண்டன் ( 27 ), அஜித்குமார் (22), குமார் (35 ) ஆகிய மூன்று பேர் மரம் வெட்டி கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களை நேற்று போலீசார் கைது செய்து மரங்களை பறிமுதல் செய்தனர் .
நெல்லை மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில், ஆலங்குளம் ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்கள் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் இன்று [மார்ச்.24] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். அவசர உதவிக்கு 100யையும் தொடர்பு கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது
தென்காசி மாவட்டம் குற்றாலம் ஏழைகளின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழந்தோட்ட அருவி, சிற்றருவி, தேனருவி, செண்பகாதேவி அருவி, புலி அருவி, பழைய குற்றால அருவி என 8 அருவிகள் அமைந்துள்ளன. கடல் மட்டத்திலிருந்து 1000 அடி உயரத்தில் இருக்கும் தேனருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. *தெரியாதவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*
தென்காசி மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? மாபெரும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி வரும் மார்ச்-30 (ஞாயிறு) குத்துக்கல்வலசையில் அமைந்துள்ள SRR திருமண மஹாலில் நடைபெறுகிறது. இதில் அனைத்து மாணவ மாணவிகளும் கலந்து கொள்ளுமாறு இன்று கேட்டுக் கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். *மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு பகிரவும்*
தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியை சேர்ந்த அருணாச்சலம்(58) என்பவர் வீட்டின் தகர கூரையில் கால் வைத்தபோது கீழே விழுந்து, தலையில் அடிபட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்ற மூளைச்சாவு அடைந்ததால் உறவினர்கள் ஒப்புதலுடன் அவரது உடல் உறுப்புகள் நேற்று(மாரச் 23) இரவு தானம் பெறப்பட்டன. இன்று அரசு சார்பில் இறுதி மரியாதை செய்து அவரது உடல் ஒப்படைக்கப்பட உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று (மார்ச்-23) இரவு தென்காசி, புளியங்குடி சங்கரன்கோவில், ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
புளியறையில் அமைந்துள்ள சதாசிவ மூர்த்தி திருக்கோயிலில் மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். சிவனுக்கு வலது பின் திசையில் நவநீத கோபாலர், சுற்றுப்பிரகாரத்தில் சதாசிவமூர்த்தி, சண்டிகேஸ்வரர், சனீஸ்வரன், சுப்பிரமணியர், பைரவர், நாகர்சந்திரன், சப்த கன்னிகள் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். திருமணத்தடை நீங்க, கல்வி, வேலை வாய்ப்பு, வியாபாரத்தில் சிறந்து விளங்க இங்கு வேண்டலாம். *ஷேர் பண்ணுங்க*
தென்காசி மாவட்டம் செங்கோட்டையிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் திருமலை முத்துக்குமார சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள திருமலைக் குன்றின் மீதும் ஒரு உச்சிப்பிள்ளையார் எழுந்தருளியிருக்கிறார். இங்குள்ள உச்சிப்பிள்ளையார் சன்னதிக்குச் செல்ல 16 படிக்கட்டுக்கள் உள்ளன. இந்த 16 படிகளை ஏறி இவரை வணங்குபவர்களுக்கு 16 வகை செல்வங்களும் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. *மற்றவர்களுக்கும் பகிருங்கள்*
தென்காசி மாவட்டம் இலஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட அரசரடி விநாயகர் திருக்கோவிலில் மண்டலபிஷேகம் நடைபெற்றது. இதில் இலஞ்சி வாய்க்கால் அருகே அமைந்துள்ள அரசரடி விநாயகர் திருக்கோயிலில் இன்று காலை கணபதி ஹோமம், சிறப்பு பூஜை, சிறப்பு ஆராதனை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
சுரண்டை அருகே உள்ள வெள்ளகாலில் இன்று மலைப்பாம்பு உயிருடன் பார்த்த பொதுமக்கள் சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சுரண்டை தீயணைப்பு அலுவலர் ரமேஷ் தலைமையில் நிலைய அலுவலர்கள் பாலசந்தர், ரவீந்திரன், சாமி, திலகர், நாண்முகராஜன் எட்வின் பொன்ராஜ் ஆகியோர் விரைந்து சென்று மலைப்பாம்பை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பொதுமக்கள் தீயணைப்பு துறையினரை பாராட்டினர்.
Sorry, no posts matched your criteria.