India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டத்தில் சாலை விபத்துகளில் காயமடைந்து உயிருக்கு போராடும் நபரை மருத்துவமனைக்கு 1மணி நேரத்திற்குள் கொண்டு சென்று உயிரை காப்பாற்றும் நபர்களை கௌரவிக்கும் வகையில், நல்ல குடிமகன் திட்டத்தின் கீழ் பாராட்டு சான்றிதழுடன் ரூ.5000 பரிசு வழங்க பரிந்துரை செய்யப்படும். மேலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நபருக்கு தகுந்த சட்ட பாதுகாப்பு வழங்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 10ம் தேதி அலுவலக வளாகத்தில் நடக்கிறது. முகாமில் 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐடி.ஐ டிப்ளமோ படித்தவர்கள் பங்கேற்கலாம். மேலும், தகவலுக்கு www.tnprivatejobs.tn.gov என்ற இணையத்தளத்தில் பார்க்கலாம்.
தென்காசி மாவட்டம் மேலபட்டமுடையார் புரம் தன்பத்து குளத்து கரையில், விவசாய நிலத்திற்கு சென்ற மின் வயர் தாழ்வாக கிடந்துள்ளது. அதை கவனிக்காமல் நேற்று அப்பகுதிக்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்த மேலபட்டமுடையார் புரத்தை சேர்ந்த முத்தையா மகன் வெள்ளத்துரை(69) மின்சாரம் தாக்கி பலியானார். இது குறித்து பாவூர்சத்திரம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 10ம் தேதி அலுவலக வளாகத்தில் நடக்கிறது. முகாமில் 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐடி.ஐ டிப்ளமோ படித்தவர்கள் பங்கேற்கலாம். மேலும், தகவலுக்கு www.tnprivatejobs.tn.gov என்ற இணையத்தளத்தில் பார்க்கலாம்.
தென்காசியை சேர்ந்த சப்பானி என்ற சேகர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தென்காசி வடகரை நகராட்சி பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அரிவாள், கத்தி போன்ற பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றனர். இதனை தடை செய்வதற்கு தென்காசி எஸ்.பி. வாய்மொழி உத்திரவிட்டுள்ளார் என தெரிவித்துள்ளார். இந்த வழக்கை நேற்று(ஜன.7) விசாரித்த நீதிபதி தென்காசி எஸ்.பி. பதிலளிக்க உத்தரவிட்டார்.
தென்காசியில் தனியார் டெக்ஸ்டைல்ஸ் சார்பாக, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி கல்லூரி மாணவிகள் மற்றும் இல்லதரசிகளுக்கான மாபெரும் கோலப்போட்டி நடைபெறுகிறது. போட்டியானது டிச.19ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை எம்கேவிகே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. கலந்துகொள்ள விரும்புவோர் 9942671958 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தென்காசி அருகே ஆன்லைன் வர்த்தகத்தில் பணி வாங்கித் தருவதாகக்கூறி போலியாக நேர்முகத் தேர்வு நடத்தி, 40-க்கும் மேற்பட்டோரிடம் இருந்து சுமார் ரூ.87 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக உதயகுமார் என்ற இளைஞர் மீது எழுந்த புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் தென்காசி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சென்னை வரை சென்று(ஜன.6) உதயகுமாரை கைது செய்தனர்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று(ஜன.7) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பேச்சுப்போட்டி, கவிதை, கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளன. 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 21 ஆம் தேதியும், கல்லூரி மாணவர்களுக்கு 22 ஆம் தேதியும் தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வைத்து நடைபெற உள்ளது. இதில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டார்.
தென்காசி மாவட்டத்தில் 4,74,710 அரிசி பெரும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் 178 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்கள் வசிக்கும் குடும்பங்களுக்கும் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை உடன் 1முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகை வருகிற 9 ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. அனைவரும் பொங்கல் பரிசை பெற்றுக் கொள்ளுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (ஜன.7) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.