Tenkasi

News January 10, 2025

தென்காசிக்கு புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை?

image

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது, பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் பெரம்பலூர், மயிலாடுதுறை, தென்காசி,ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் காஞ்சிபுரம் ஆறு மாவட்டங்களில் மத்திய அரசின் அனுமதி கிடைத்தால் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படும் என்றார்.

News January 10, 2025

சித்திரம்பட்டி விரைவில் தூத்துக்குடியில் இணைக்கப்படும்

image

கோவில்பட்டி அருகில் உள்ள சித்திரம்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. முகாமிற்கு தலைமை வகித்து கலெக்டர் இளம்பகவத் பேசுகையில், சித்திரம்பட்டி கிராமம் வருவாய் மாவட்டம் தூத்துக்குடி மாவட்டமாக இருந்தாலும், வளர்ச்சிப் பிரிவு தென்காசி மாவட்டத்தில் உள்ளது. இதனை சரி செய்வதற்கான முயற்சிகளை நாம் எடுத்து வருகிறோம். விரைவில் இந்த கிராமம் தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சிப்பிரிவில் இணைக்கப்படும்.

News January 10, 2025

திருவள்ளுவர் கழகத்திற்கு முதல்வர் வழங்கிய பரிசு

image

தென்காசி திருவள்ளுவர் கழகம் ஆற்றிவரும் சீரிய தமிழ்ப் பணிகளைப் பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசு 2023ஆம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது வழங்கி, விருதுத்தொகையாக ரூபாய் 5 இலட்சத்திற்கான காசோலையும் கேடயமும் தகுதியுரையும் வழங்கியுள்ளது. அவர்களை அமைச்சர் சாமிநாதன், தென்காசி நகர்மன்ற தலைவர், நேரில் சந்தித்து தங்களது வாழ்த்து தெரிவித்தனர்.

News January 10, 2025

தென்காசி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து அதிகாரிகள்

image

தென்காசி மாவட்டத்தில் இன்று (09.01.2025) இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பட்டியலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுபவர்கள் தொலைப்பேசி எண் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் 04633-295455, 9884042100-ஐ தொடர்பு கொள்ளலாம் என தென்காசி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

News January 10, 2025

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை, தென்காசி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில் 6 வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். போக்குவரத்து துறை அதிகாரிகள், வட்டார போக்குவரத்து அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News January 9, 2025

தேமுதிக சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் 

image

தமிழகத்தில் நடைபெற உள்ள தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், போதையில்லா தமிழகத்தை உருவாக்க கோரியும் தேமுதிக சார்பில் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே நாளை 10ம் தேதி காலை 10 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா பங்கேற்று கண்டன உரையாற்றுகிறார்.

News January 9, 2025

நரசிம்மர் கோவிலில் நாளை சொர்க்க வாசல் திறப்பு

image

கீழப்பாவூரில் 16 திருக்கரங்களுடன் அமைந்துள்ள அபூர்வ ஸ்ரீநிதியும் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நாளை (ஜன.10) நடைபெறவுள்ளது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன. மாலை 5 மணிக்கு பரமபத வாசல் திறந்து பூஜைகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து 1008 அகல்விளக்கு பூஜை ஏற்றப்படுகிறது.

News January 9, 2025

தென்காசி அருகே நான்கு பேர் கைது

image

சிவகிரி சுடுகாட்டுப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து நேற்று போலீசார் சோதனை செய்த போது அங்கு ஊத்துமலை சேர்ந்த வசந்தகுமார் (24), கனகராஜ் (23), ராமமூர்த்தி (27) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.இதனையடுத்து மூன்று பேரை கைது செய்தனர். 17 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

News January 9, 2025

திருநங்கைகள் சாதனை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

2025-ஆம் ஆண்டுக்கான திருநங்கையர்களுக்கான முன்மாதிரி விருது திருநங்கைகள் தினமான ஏப்ரல்-15 அன்று வழங்கப்பட உள்ளது. இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் awards.tn.gov.in பதிவு செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் பிப்.10 க்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். 

News January 9, 2025

தென்காசி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மற்றும் பிற அரசு அலுவலகங்களிலும் அரசு வேலை வாங்கித் தருவதாக போலியான செய்திகள் பரவுவதாக தெரிய வருகிறது.பொதுமக்கள் இத்தகைய செய்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.அரசு வேலை வாங்கித் தருவதாக யாரேனும் முறைகேட்டில் ஈடுபடுவதாக தெரிய வந்தால், தகவல்களை உடனடியாக காவல்துறைக்கு புகாராக தெரிவிக்குமாறு கேட்டுக் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!