India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சாம்பவர் வடகரை, துரைச்சாமிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வரும் ஹபினா இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரை போட்டியில் மாநில அளவில் 3வது இடம் பிடித்து, குடியரசு தின விழாவில் ஆளுநரிடம் பாராட்டு சான்றிதழும் பரிசும் பெற்றார். இதை தொடர்ந்து, பாஜக தென்காசி மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி இன்று மாணவியை நேரில் சந்தித்து பாராட்டினார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நடுவக்குறிச்சியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக தொழில்நெறி வழிகாட்டும் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையில் இன்று(ஜன.28) நடைபெற்றது. இந்த கண்காட்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
பாஜக சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், இ.யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை தலைவரும் தமிழக அரசின் வக்பு வாரிய தலைவருமான நவாஸ் கனியை அவதூறாக பேசியதாக, அவரை கண்டித்தும், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று போராட்டம் நடைபெற்றது. தென்காசி இளைஞரணி துணை தலைவர் பீரப்பா தலைமையில், ரவண சமுத்திரம் இளைஞர் அணியினர் செருப்பு அனுப்பும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புளியங்குடி சிந்தாமணியை சேர்ந்தவர் மாரியப்பன்(48). விவசாய தொழிலாளி. சில தினங்களுக்கு முன் மாரியப்பன் வீட்டில் ரூ.22 லட்சம் பணம் வைத்திருந்ததாகவும், அதை காணவில்லை எனவும் புளியங்குடி போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக மாரியப்பனிடம் போலீசார் அவரிடமே இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது, எப்படி சேமித்தீர்கள் என விசாரணை மேற்கொண்டதில் அவர் விரக்தி அடைந்தார். நேற்று மதுவில் விஷம் கலந்து குடித்து பலியானார்
திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு தென்காசி புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இதனையடுத்து தனியாக வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் காவல்துறை சார்பாக தனியாக கொண்டுவரப்பட்டது. தற்போது நேற்று (ஜன.27) தென்காசியை தனி வனக்கோட்டமாக அமைப்பதற்கு தலைமைச் செயலாளர் செந்தில்குமார் ஆணை பிறப்பித்துள்ளார்.
தென்காசி மாவட்ட கலெக்டர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்காசி மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாத விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 31ம் வெள்ளி காலை 11:00 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்கிறார்கள். ஆகவே விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்” என குறிப்பிட்டுள்ளார். *விவசாய நண்பர்களுக்கு பகிரவும்*
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை தாக்கி உயிரிழந்த கலைமான் நகரைச் சார்ந்தவேல்துரை குடும்பத்திற்கு 5லட்ச ரூபாய் நிவாரணமும், சொக்கம்பட்டியைச் சார்ந்த மூக்கையா குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணமும் நேற்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து ஆட்சியர் கமல் கிஷோர் வழங்கினார். உடன், எம்.பி.ராணி ஸ்ரீகுமார், டி.எஃப்.ஓ. அகில் தம்பி, ரேஞ்சர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இன்று 27.01.2025 தென்காசி மாவட்ட உட்கோட்ட பிரிவுகளில் (தென்காசி புளியங்குடி, சங்கரன்கோவில், ஆலங்குளம்) காவல் மற்றும் நெடுஞ்சாலை துறையின் இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம்.
தென்காசி மாவட்ட கலெக்டர் இன்று(ஜன.27) வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாவட்டத்தில் இருவார கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம் அனைத்து கிராமங்களில் நடத்தப்படுகிறது; பொதுமக்கள் இந்த முகாமினை சரியான முறையில் பயன்படுத்தி, தங்கள் கோழிகளுக்கு கோழிக்கழிச்சல் தடுப்பூசி இட்டு, கோழிக்கழிச்சல் நோயிலிருந்து தங்கள் கோழிகளை காப்பாற்றி, பொருளாதார முன்னேற்றம் அடையலாம்” என தெரிவித்துள்ளார். *கோழி வளர்போருக்கு பகிரவும்*
தென்காசி மாவட்டம் மருத்துவப் பணிகள் மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனராக பணியாற்றி வருபவர் பிரேமலதா. சென்னையில் நேற்று நடைபெற்ற 76 வது குடியரசு தின விழாவில் தென்காசி மாவட்டத்தை தமிழகத்தில் மருத்துவ சேவை தருவதில் முதல் இடத்திற்கு கொண்டு வந்த மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பிரேமலதாவிற்கு மாநில சுகாதாரத்துறை இயக்குனர் விருது மற்றும் சான்றிதழை வழங்கி பாராட்டினார்.
Sorry, no posts matched your criteria.