Tenkasi

News February 6, 2025

மாவட்ட கல்வி அலுவருடன் தனியார் பள்ளி நிர்வாகிகள் சந்திப்பு

image

தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற நிதி உதவி பெறும் தனியார் பள்ளி சங்க மாநில நிர்வாகிகள் பலர், தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபிரகாஷை நேற்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில் பல்வேறு கோரிக்கைகளான தொடர் அங்கீகாரம், செயலர் புதுப்பித்தல், நியமன முன் அனுமதி, நியமன ஒப்புதல் போன்றவைகள் விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

News February 5, 2025

தென்காசி திமுக சார்பில் முதல்வருக்கு வரவேற்பு- எம்எல்ஏ

image

தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்.எல்.ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நாளை (பிப்.6) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தருகிறார். இதையடுத்து, தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் கங்கைகொண்டான் சிப்காட் வளாகம் அருகில் காலை 10 மணிக்கு வரவேற்பு அளிக்க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்” என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News February 5, 2025

அடிதடி வழக்கு – 2 பேருக்கு 4 ஆண்டு கடுங்காவல்!

image

செங்கோட்டை பகுதியில் கடந்த 2014ஆம் ஆண்டு அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட செங்கோட்டையை சேர்ந்த தடிசெல்வம்(47) மற்றும் சுரேஷ்(45) ஆகியோருக்கு இன்று செங்கோட்டை குற்றவியல் நீதிமன்ற விசாரணையில், நீதிபதி சுனில் குமார் 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.23,000 தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

News February 5, 2025

புளியங்குடியில் த.வெ.க மாவட்ட செயலாளருக்கு வரவேற்பு

image

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் புதிதாக பல்வேறு மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளராக புளியங்குடி சிந்தாமணி பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் மாரியப்பன் என்பவர் அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து, சென்னையில் இருந்து சிந்தாமணி பகுதிக்கு வந்த மாரியப்பனுகு தவெகவினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

News February 5, 2025

ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத இளைஞர் பலி!

image

கடையநல்லூர் – பாம்புகோவில் சந்தை இடையே ரயில் பாதையில் நேற்று (பிப்.4) அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் அடிபட்டு, இறந்து கிடந்தார். இது பற்றி ரயில் நிலைய அதிகாரி கொடுத்த தகவலின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் விரைந்து வந்து, சடலத்தை கைப்பற்றி, பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News February 5, 2025

சங்கரன்கோவிலில் பிப்.7-ல் தெப்ப உற்சவம்!

image

சங்கரன்கோவிலில் உள்ள பிரச்சிபெற்ற சங்கரநாராயணசாமி கோவிலில் தை மாத கடைசி வெள்ளிக்கிழமையை ஒட்டி பிப்.7-ல் தெப்ப உற்சவம் நடைபெறவுள்ளது. அன்று மாலை சுவாமி, அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி, சிறப்பு அபிசேகம், தீபாராதனைக்கு பிறகு தெப்பத்தில் 11 முறை வலம் வருதலும், வீதி உலாவும் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகத்தினர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

News February 5, 2025

தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் சார்பில் இன்று (பிப் 4ம் தேதி) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 4, 2025

கொலை வழக்கில் 3 பேருக்கு  ஆயுள் தண்டனை

image

தென்காசி, பாப்பக்குடி புதுக்கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா என்ற துரை 2022 ஆம் ஆண்டு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தென்காசி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது இந்த வழக்கில் தொடர்புடைய லண்டன் துரை, சுடலைமணி, மாரியப்பன் ஆகிய 3 நபர்களுக்கு நீதிபதி மனோஜ் குமார் ஆயுள் தண்டனை விதித்து தலா 1000 ரூபாய் அபராதம் விரித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் வேலுச்சாமி ஆஜரானார்

News February 4, 2025

புளியறையில் பழவெடி வெடித்து பசுவின் வாய் கிழிந்தது

image

புளியறையில் உக்கோணம் பகுதியில் பொன்னையா பிள்ளை களத்தில் வசித்து வரும் விவசாயி திருவாரிமுத்து என்பவரின் மாடு மேய்ந்து  கொண்டிருக்கும் போது பன்றிக்காக வைக்கப்பட்ட பழவெடி வெடித்து கன்று ஈன்று ஒரு மாதமே ஆன பசு வாய் முழுவதுமாக காயமாடைந்தது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் போலிசார் தீவிர  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 4, 2025

கண்டக்டரை கத்தரியால் குத்திய சிறுவன் பரபரப்பு

image

ஆலங்குளம் , ஆழ்வான் துலுக்க பட்டியை சேர்ந்த 17 வயது சிறுவன் நேற்று (பிப்-3)குடிபோதையில் அரசு பஸ்சில் தகராறு செய்ததால் பாவூர்சத்திரம் அருகே இறக்கி விடப்பட்டான். மது போதையில்  இருந்த சிறுவன், அந்த கண்டக்டர் என எண்ணி, வேறு பஸ் கண்டக்டர் மாடசாமி என்பவரை கத்திரிக்கோலால் குத்தி விட்டான். கண்டக்டருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது; சிறுவன் சீத்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். போலீசார்  விசாரணை.

error: Content is protected !!