India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாதாந்திர தரிசனத்திற்காக சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் இன்று(பிப்ரவரி 12) கோவில் நடை திறக்கப்படுகிறது. கூட்ட நெரிசலைத் தவிர்கக, பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்து டிக்கெட் பெற்றுச் செல்லுமாறு கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது,. பக்தர்கள் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்துக் கழகம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.
தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை காவல் சரகம் திருச்சிற்றம்பலத்தில், நேற்று(பிப்.11) திடீரென ஏற்பட்ட தகராறில் அந்தோணி(38) என்பவர் கல்லால் தாக்கியதில் பண்டாரம்(55) என்பவர் பலத்த காயத்துடன் சுரண்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து பாளையங்கோட்டை GH தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சாம்பவர் வடகரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் வரும் 21 ஆம் தேதி அன்று மதியம் 2:30 மணியளவில் தென்காசியில் உள்ள இசக்கி மஹாலில் வைத்து ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மாநில மாவட்ட ஒன்றிய, பேரூர், நகர பொறுப்பாளர்கள் நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட செயலாளர் கிருஷ்ண பாண்டியன் இன்று கேட்டுக்கொண்டார்.
தென்காசி மாவட்டதில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளுக்கு தனி அடையாள அட்டை வழங்கும் பணி நடந்துகொண்டு இருக்கிறது. ஆதார் போல விவசாயிகளுக்கு தனி அடையாள அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன் மூலம் அவர்கள் பல்வேறு வேளாண் திட்டங்களை பெற முடியும் மற்றும் விவசாய கடன் அட்டை உள்ளிட்ட திட்டங்களை சிக்கலின்றி பெற முடியும். இதற்காக விவசாய நிலத்திற்கு வந்து விவசாயிகளுக்கு அட்டை வழங்கும் பணி நடக்கிறது.
தென்காசி -ஙகடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவிலில் இன்று(பிப்.11) தைப்பூச திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து வள்ளி – தெய்வானை சமேத ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. பக்தர்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.
தென்காசி இன விலக்கிலிருந்து இலத்தூர் செல்லும் சாலையில், வடபுறம் இடுகாடு அருகில் முட்புதர்கள் நிறைந்த குளத்தில் இன்று(பிப்.11) காலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்துதென்காசி SP உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டு விசாரித்து வருகின்றனர். பத்திரிகையாளர்களை அங்கு அனுமதிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
தென்காசி கலெக்டர் வெளியிட்ட செய்தி குறிப்பில், மாவட்ட கண்காணிப்பு குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு, பதிவு புதுப்பித்தல் மற்றும் உதவித்தொகை மனுக்கள் இணையதள வழியாக விண்ணப்பிக்கும்போது எழும் சந்தேகங்கள் தொடர்பான விளக்கங்கள் குறித்து தொழிற்சங்க கலந்தாய்வுக் கூட்டம் பிப்.12 அன்று தென்காசி தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம் அலுவலகத்தில் நடைபெறும் என்றுள்ளார்.
தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாச்சாமி, மாநில தலைவர் அண்ணாமலை மூலம் பிரதமர் மோடிக்கு நேற்று(பிப்.10) மனு ஒன்று அனுப்பியுள்ளார். அதில், தொழில் முனைவோருக்கு வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கவும், போக்குவரத்து கட்டமைப்பினை உருவாக்கும் வகையிலும் உடான் திட்டத்தின் கீழ் தென்காசியில் விமான நிலையம் அமைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். தென்காசியில் ஏர்போர்ட் அமைவது குறித்து உங்கள் கருத்து?
தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் சார்பில் இன்று (பிப் 10ம் தேதி) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை மாவட்டத்தின் அனைத்து வட்டார பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் அளித்தனர். அந்த வகையில் இன்று 552 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.