India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் குழுக்களின் இயற்கை சந்தை இன்று காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை பொட்டல் புதூர் பொன் நகர் அருகே வார சந்தையில் நடைபெறுகிறது. இதில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் நாட்டு காய்கறிகள் கீரை வகைகள் பழங்கள் அரிசி சிறுதானிய உணவுகள் தானியங்கள் செக்கு எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் தினந்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இன்று (ஆகஸ்ட் 9) தென்காசி மாவட்ட உட்கோட்ட பகுதியில் உள்ள ஊர்களான ஆலங்குளம் தென்காசி புளியங்குடி சங்கரன்கோவில் போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு இரவு காவல்துறை உதவி தேவைப்பட்டால் மேலே உள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
பழைய குற்றாலம் அருவியை விவசாயிகளுடைய பயன்பாட்டிற்காக 24 மணி நேரமும் திறக்க வேண்டும். மீண்டும் பொதுப்பணித்துறை உடைய கட்டுப்பாட்டிற்கு அருவியை ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கங்களின் சார்பில் வரும் ஆகஸ்ட் 15 அன்று மலையோர கிராம பகுதிகளில் கருப்புக்கொடி கட்டிப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
புளியங்குடி பகுதியில் விவசாயி பணிக்கு சென்ற பெண்களை கரடி கடித்து படுகாயம் அடைந்த நிலையில் கரடியை பிடிக்க 3ஆவது நாளாக வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். மாவட்ட வனத்துறை அலுவலர் அகில் நல்ல தம்பி தலைமையில் ட்ரோன் கேமராக்கள் உதவியுடன் 30க்கும் மேற்பட்ட வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு 3ஆவது நாளாக கரடி நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
தென்காசியில் ரக்க்ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு ரக்க்ஷா அணிவிக்கும் விழா நேற்று இரவு நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்ட பாஜக துணைத் தலைவர் முத்துக்குமாருக்கு தென்காசி மாவட்ட ரக்க்ஷா பந்தன் குழுவினர் நேரில் சந்தித்து ரக்க்ஷா அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில் பாஜக நிர்வாகிகள் மற்றும் ரக்க்ஷா பந்தன் குழுவினர் உட்பட பலர் உடன் இருந்தனர்.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான குற்றாலத்தில் தற்பொழுது சீசன் காலமாகும். தென்மேற்கு பருவமழை கடந்த 10 தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இல்லாததினால் காரணமாக அருவியில் நீர்வரத்து தற்போது குறைய தொடங்கியுள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றால அருவியில் குளிப்பதற்கு திரண்டு வந்தனர்.
தென்காசி மக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. இங்கே <
தென்காசி மாவட்ட பெண்களே! உங்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய தமிழக அரசு உதவி எண்களை வெளியிட்டுள்ளது. இந்த உதவி எண்களை உங்க மொபைலில் SAVE பண்ணிக்கோங்க. உங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய பெரிதும் உதவும்…
➟குழந்தைகள் பாதுகாப்பு: 1098
➟பெண்கள் பாதுகாப்பு: 1091/181
➟காவல் ஆம்புலன்ஸ்: 112
➟மூத்த குடிமக்கள் உதவி – 14567
நம்ம தென்காசி மாவட்ட பெண்கள் எல்லாரும் இந்த எண்ணை SAVE பண்ண SHARE பண்ணுங்க!
தென்காசி மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று (ஆக. 8) இரவு தென்காசி, புளியங்குடி சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கடையம் அருகே அமைந்துள்ள தேரையர், சித்தர், அகத்தியர் வழிபட்ட தோரணமலை முருகன் கோயில் ஆடி மாத பெளர்ணமி கிரிவலம் நாளை காலை 6 மணி முதல் நடைபெறும். இந்த கிரிவலப்பாதையை வலம் வருவதற்கு சுமார் 1.15 மணி நேரம் ஆகும். அதனைத் தொடர்ந்து காலையும், மதியமும் அண்ணதானம் நடைபெறும்.
Sorry, no posts matched your criteria.