Tenkasi

News April 3, 2026

BREAKING தென்காசி மாவட்ட பாஜக வேட்பாளர் அறிவிப்பு

image

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர் பட்டியலை அடுத்ததடுத்து வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் NDA கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அனைத்து தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் சற்று முன் அறிவிக்கப்பட்டனர். அதில் வாசுதேவநல்லூர் (தனி) தொகுதி பாஜக வேட்பாளராக ஆனந்தன் அய்யாசாமி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

News April 3, 2026

தென்காசி: உங்கள் Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

image

தென்காசி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கு கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News April 3, 2026

ஆலங்குளம் வேட்பாளரிடம் இவ்வளவு கிலோ தங்கமா?

image

ஆலங்குளம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட வேட்பு மனு செய்துள்ள ஹரி நாடார் தன்னிடம் ரூ.17 கோடி மதிப்பிலான 11.650 கிலோ தங்க நகைகள் உள்ளதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். தற்போது ஒரு வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் அவர் தன்னுடைய பிரதிநிதி ஒருவரை அனுப்பி மனு தாக்கல் செய்துள்ளார்‌. அதில் ரூ.1.18 கோடி மதிப்பில் வாகனங்கள் இருப்பதாகவும், 24 கிரிமினல் வழக்குகள் உள்ளன என தகவல் தெரிவித்தார்.

News April 3, 2026

செங்கோட்டை: அரசு ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

image

புளியரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அலுவலக உதவியாளராக சிவசாமி என்பவர் வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த சில ஆண்டுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் வலது கால் துண்டானது. இதனால் 3 சக்கர நாற்காலியில் வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த செங்கோட்டை போலீசார் அவரது உடலை கைப்பற்றி செங்கோட்டை GH-க்கு அனுப்பி வைத்தனர்.

News April 3, 2026

சங்கரன்கோவில்: கல்லூரி மாணவர் தற்கொலை

image

பனவடலிசத்திரம் அருகே திருமலாபுரம் பகுதியை சேர்ந்த இளவரசன் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் இளவரசன் சரிவர படிக்காமல் நண்பர்களுடன் அடிக்கடி வெளியில் செல்வதால் பெற்றோர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். உடனே சிகிச்சைக்காக GH-ல் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பனவடலிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு.

News April 2, 2026

தென்காசி: தொழில் தொடங்க ரூ.10 லட்சம் கடன்

image

தமிழக அரசால் TWEES என்ற திட்டத்தின் மூலம் பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, அழகு நிலையம், லாண்டரி சேவை உள்ளிட்ட தொழில்கள் இதில் அடங்கும். இதற்கு கல்வி தகுதி, சொத்துப் பத்திரம் தேவையில்லை . 18 வயது முதல் 55 வயது வரை உள்ள பெண்கள் <> இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். SHARE IT

News April 2, 2026

தென்காசி: தொழில் தொடங்க ரூ.10 லட்சம் கடன்

image

தமிழக அரசால் TWEES என்ற திட்டத்தின் மூலம் பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, அழகு நிலையம், லாண்டரி சேவை உள்ளிட்ட தொழில்கள் இதில் அடங்கும். இதற்கு கல்வி தகுதி, சொத்துப் பத்திரம் தேவையில்லை . 18 வயது முதல் 55 வயது வரை உள்ள பெண்கள் <> இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். SHARE IT

News April 2, 2026

தென்காசி : இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க<> tnuwwb.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3)அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். SHARE IT

News April 2, 2026

தென்காசி: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி EASY!

image

தென்காசி மக்களே உங்கள் வீட்டின், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <>vptax.tnrd.tn.gov.in<<>> என்ற தளத்தில் அனைத்து சேவைகளையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணையோ (அ) helpdesk.vptax@tnrd.in என்ற மின்னஞ்சலுக்கும் சந்தேகத்தை தெரிவிக்கலாம். எல்லோரும் தெரிஞ்சிக்க SHARE பண்ணுங்க.

News April 2, 2026

தென்காசி: இலவச wifi வேண்டுமா?

image

தென்காசி மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-Wani Wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். இந்த <>லிங்க்<<>> மூலம் விண்ணப்பித்தால் உங்கள் வீடுகளுக்கே வந்து அமைத்து தருவார்கள். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!