India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மக்களே தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம் சார்பாக தற்காலிக பணியாளர்களுக்கு பொருளாதார மேம்படுத்தும் நோக்கத்தோடு புதிதாக இ.ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் வழங்குகிறது. இந்த <
தென்காசி மாவட்டத்தில் இன்று (ஆக.13) பெரும்பாலான இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளது. கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், மாவடிக்கால், குமந்தாபுரம், தார்காடு, போகநல்லூர், மங்களாபுரம், இடைகால், கொடிகுறிச்சி மற்றும் நயினாரகரம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது. மற்றவர்களுக்கு SHARE பண்ணி அவுங்க பணிகளை வேகமாக முடிக்க சொல்லுங்க!
குற்றாலம் பேரூராட்சிக்குட்பட்ட திரு குற்றாலநாதர் சுவாமி திருக்கோவிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பகல் 12:30 மணி அளவில் சிறப்பு வழிபாடும் அதனைத் தொடர்ந்து பொது விருந்து நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பொதுமக்கள் கலந்து கொள்ள திரு குற்றாலநாதர் கோவில் உதவி ஆணையர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க
தென்காசி மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கிராம சபை கூட்டம் இக்கிராம சபைக் கூட்டத்தினை கண்காணிக்க மாவட்ட அளவிலான உதவி இயக்குநர் நிலை அலுவலர்கள் மற்றும் வருவாய் வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்கிராம சபை கூட்டங்களில் கிராம ஊராட்சிகளின் அனைத்து பொதுமக்களும் கலந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க
தென்காசி வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆக.17 மாலை 4.20மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில் வழியாக ஆக.18 மதியம் 12.30க்கு பெங்களூரு சென்று சேரும். மேலும், ஆகஸ்ட் 18 மதியம் 2.15மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் காலை 10.15மணிக்கு நெல்லையை சென்றடையும்.
தென்காசி மாவட்டத்தில் நடப்பு கரீப் பருவத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் நெல் பயிருக்கு பிரீமியம் செலுத்தி விவசாயிகள் பதிவு செய்ய ஆக.14 கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் பயிரினை காப்பீடு செய்ய விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை (நெல்) 1 பயிருக்கு ரூ.720 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இயற்கை சீற்றங்களால் வருவாய் இழப்பு ஏற்படுவதிலிருந்து விவசாயிகளை பாதுகாக்கும்.
தமிழக காவல்துறை சார்பில் காவல் உதவி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் தென்காசி மாவட்டத்தில் உள்ள இடங்களில் ஏதேனும் சிக்கலில் மாட்டிக்கொண்டால் இந்த செயலியில் உள்ள சிவப்பு நிற பொத்தானை அழுத்தினால், உங்கள் விவரம், இருப்பிடம் ஆகியவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விடும். இதன் மூலம் துரிதமாக உதவி கிடைக்கும். இங்க <
தென்காசி, சுரண்டையை சேர்ந்த முத்துக்குமார் (25). நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு விஷம் குடித்து தற்கொலை செய்யப்போவதாக உரிமையாளரிடம் தொடர்பு கொண்டு போனை அணைத்துவிட்டார். உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. நேற்று காலை பரங்குன்றாபுரம் பாலத்தில் மயங்கிய நிலையில் கிடந்தவரை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர் நேற்று இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தென்காசி மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. இந்த <
நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் தென்காசியில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் நாளை மறுநாள் (ஆகஸ்ட்.14) வெளியாகிறது. இதற்கான முன்பதிவும் நம் தென்காசி மாவட்டத்தில் துவங்கி உள்ளது. தமிழக அரசு நிர்ணயித்த கட்டணம் சாதாரண தியேட்டர் ரூ. 130 – 160 மற்றும் மல்டிப்பிளக்ஸ் ரூ.190 ஐ விட அதிகம் கட்டணம் வசூலித்தால் அதற்கான தகுந்த ஆதாரத்துடன் தென்காசி தாசில்தார் (04633-222262) அல்லது இங்கு <
Sorry, no posts matched your criteria.