Tenkasi

News April 14, 2026

தென்காசி : இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3)அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். SHARE IT

News April 14, 2026

தென்காசி: மதிமுக ஒன்றிய கவுன்சிலரிடம் பணம் பறிமுதல்

image

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் அவ்வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் குருவிகுளத்தை சேர்ந்த மதிமுக ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன் என்பவர் உரிய ஆவணங்களின்றி ரூ.1 லட்சம் பணம் வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் நேற்று சிவகிரி தேர்தல் தாசில்தார் ரவி கணேஷிடம் ஒப்படைத்தனர்.

News April 14, 2026

தென்காசி: பள்ளிகளுக்கு நாளை விடுமுறை – கலெக்டர்

image

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 23ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்களாக ஆசிரியர் பெருமக்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால் நாளை (ஏப் 15) தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் உத்தரவு.

News April 14, 2026

தென்காசி: பள்ளிகளுக்கு நாளை விடுமுறை – கலெக்டர்

image

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 23ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்களாக ஆசிரியர் பெருமக்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால் நாளை (ஏப் 15) தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் உத்தரவு.

News April 14, 2026

தென்காசி: விபத்தில் ஐந்திணை மக்கள் கட்சி தலைவர் பலி

image

கரிவலம்வந்தநல்லூரை சேர்ந்த ஐந்திணை மக்கள் கட்சி நிறுவன தலைவர் தேவதாஸ் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் முகவூர் பகுதியில் தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற போது விக்னேஷ் என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக தேவதாஸ் பைக் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி மற்றொரு பைக் மீது மோதியதில் தேவதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு.

News April 14, 2026

தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

image

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 23ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்களாக ஆசிரியர் பெருமக்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால்
15ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் உத்தரவு.

News April 14, 2026

தென்காசி: பெண்ணிடம் நகை பறித்த அறநிலையத்துறை ஊழியர்

image

கீழப்பாவூரை சேர்ந்த சாந்தி 12ம் தேதி செங்கோட்டைக்கு புறப்பட்ட ரயிலில் சென்ற போது தென்காசி ரயில் நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் சாந்தி கழுத்தில் கிடந்த தங்க நகையை பறிக்க முயன்றார். சாந்தி சத்தமிடவும் அவர் அங்கிருந்து தப்பியோடினார். இதுகுறித்த விசாரணையில் குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் தமிழ் புலவராக பணிபுரிந்து வரும் கருப்பசாமி (55) என்பவரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

News April 13, 2026

தென்காசி : ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

image

மத்திய அரசின் (PMGKAY) திட்டத்தின் மூலமாக வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக 5 கிலோ அரிசி (அ) கோதுமை வழங்கப்படுகிறது. இதை பெறுவதற்க்கு AAY, PHH அட்டைதாரர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்ணபிக்க வேண்டிய அவசியமில்லை. உங்க ரேஷன் கடையில் கை ரேகை, கண் விழியை பதிவு செய்து இலவசமாக பெறலாம். அட்டை இருந்தும் வழங்கவில்லை என்றால் 18004255901 புகார் தெரிவியுங்க. SHARE IT

News April 13, 2026

தென்காசி : 50க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைவு

image

தென்காசி தெற்கு மாவட்டம் ஆலங்குளம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பலபத்திர ராமபுரம் கிராமத்தில், நேற்று மாற்றுக் கட்சியை சார்ந்த 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், திமுக ஒன்றிய செயலாளர் MPM. அன்பழகன் தலைமையில், மாவட்ட செயலாளர் வே. ஜெயபாலன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இணைந்தவர்களுக்கு கருப்பு-சிவப்பு வேஷ்டி அணிவித்து வரவேற்பளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பல்வேறு கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News April 13, 2026

தென்காசி: டிகிரி முடித்தால் வங்கியில் ரூ.48,000 சம்பளம்! APPLY

image

தென்காசி மாவட்ட பட்டதாரிகளே, பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள 1,000 Local Bank Officers  பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்தால் போதுமானது. மாதம் ரூ.48,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஏப்.20ஆம் தேதியே கடைசி நாளாகும். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். SHARE IT

error: Content is protected !!